ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரம்

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதற்கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 7 மாதமாக நடந்து வருகிறது. இந்த பணியில் 3 பகுதிகளில் 32 குழிகள் தோண்டப்பட்டு, 62க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், நெல்மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார். திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் ஆய்வுகள் குறித்து கலெக்டரிடம் விளக்கமளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.