தப்பித்து வந்த கமல்… ரசிகர்களிடம் மன்னிப்பு… எதுக்காக தெரியுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை படக்குழு மிகவும் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் படங்கள் இவரது சிறப்பான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள நிலையில், தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படம் உருவாகியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இந்தப் படத்தின் சிறப்பான பிரமோஷன்கள் நடைபெற்று வருகின்றன. ரயில்களில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பல பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு நாளைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

ட்ரெயிலர் -இசை வெளியீடு

ட்ரெயிலர் -இசை வெளியீடு

இதற்கென படக்குழு சிறப்பாக தயாராகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக இதற்கென நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற நடிகர் ஐசரி வேலனின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார்.

கமல்ஹாசன் வருத்தம்

கமல்ஹாசன் வருத்தம்

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், நிகழ்ச்சியில் தன்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்று வருத்தம் தெரிவித்தார். விக்ரம் படத்தின் சென்சாருக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதை கவனிக்கும் வேலை காரணமாக தான் அங்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் காரணத்தை விளக்கினார்.

Blade என்றாலே.. பக்கிரிதானா? சர்ச்சையாகும் பத்தல பத்தல பாடல்! | KamalHaasan – Vikram
குடும்ப பணியில் பங்கேற்பு

குடும்ப பணியில் பங்கேற்பு

விக்ரம் படத்திற்கான சென்சார் பணி இருந்தாலும் இது குடும்ப பணி என்று சிலை திறப்பு குறித்து பேசினார் கமல்ஹாசன். சென்சார் பணியிலிருந்து இந்த குடும்ப பணியை மேற்கொள்ள தான் தப்பித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே கிளம்பி சென்று விட்டார்.

English summary
Ulaganayagan kamal haasan joined Isari Velan memorial inauguration function

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.