நவீன ராபின் ஹூட் பாணியில் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்'

சென்னை: ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தையும், புதிய வெப்சீரிசையும் இயக்கவிருக்கிறார்.

தரமான இயக்குநர் பா.ரஞ்சித்

சினிமாவை இலாப நோக்கத்தோடு அணுகாமல், அடித்தட்டு மக்களின் சொல்லப்படாத, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டு காட்சிப்படுத்துபவர் இயக்குநர் பா.ரஞ்சித். 2012-ம் ஆண்டு அட்டக்கத்தியில் தொடங்கிய தனது திரைப்பயணத்தில், மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை போன்ற படங்களின் இயக்குநராகவும், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து வருகின்றார்.

கோல்டன் ரேஷியோவுடன் பா.ரஞ்சித்

கோல்டன் ரேஷியோவுடன் பா.ரஞ்சித்

இந்நிலையில், சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனமும், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து அதே பாணியில் எளிய மக்களின் வலியைச் சொல்லும் புதிய படத்தினைத் தயாரிக்கவிருக்கிறது. தன் இன மக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராகப் போராடும் நவீன கால ராபின் ஹுட், எதிரிகளிடமிருந்து தப்பிக்க தாமாகவே சிறைக்குச் செல்கிறார். ஆனால் சிறையில் அதை விட கொடுமைகள் நடப்பதை உணர்வது போன்ற மையக்கருவோடு இத்திரைப்படம் விறுவிறுப்பான கதையோட்டத்தில் உருவாகவிருக்கிறது.

பா.ரஞ்சித் - சியான் விக்ரம் கூட்டணி ?

பா.ரஞ்சித் – சியான் விக்ரம் கூட்டணி ?

நீண்ட நாட்களாக சியான் விக்ரமை வைத்துப் படம் இயக்கும்படி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அண்மையில் சியான் விக்ரமும், பா.ரஞ்சித்தும் சந்தித்து தங்கள் கூட்டணியில் படம் பண்ணுவது குறித்துக் கலந்தாலோசித்தனர். அதன் படி, தற்போது இந்த ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் சியான் விக்ரம் நவீன கால ராபின் ஹூட்டாக நடிப்பார் எனத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

வேட்டுவம் விக்ரமுக்கு கைகொடுக்குமா

வேட்டுவம் விக்ரமுக்கு கைகொடுக்குமா

நடித்து வரும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, பா.ரஞ்சித் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படம், அத்துடன் தற்போது ‘ வேட்டுவம்’ திரைப்படத்திலும் அவர் இணையும் பட்சத்தில் விக்ரமின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கான்ஸ் திரைப்பட விழாவில் ஃபர்ஸ்ட் லுக்

கான்ஸ் திரைப்பட விழாவில் ஃபர்ஸ்ட் லுக்

இதனிடையே, 75-வது கான்ஸ் திரைப்பட விழா வருகின்ற 17 மே 2022 தொடங்கி 28 மே 2022 வரையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது. இத்திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் வெளியிட லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வேட்டுவம் என்றால் வேட்டை

வேட்டுவம் என்றால் வேட்டை

‘வேட்டுவம்’ என்றால் வேட்டையாடுதல் என்று அர்த்தம். எனவே ரஞ்சித் பாணியில் மீண்டும் ஒரு பிரமிக்க வைக்கும் படைப்பு தயாராகிறது என்பதால் இப்போதே சினிமா வட்டாரத்தில் ஆர்வம் மேலோங்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்ற பட்டியலும் இன்னும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Actor Vikram acted Pa.Ranjith’s next movie vettuvam, a robin wood style movie

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.