சென்னை : தொகுப்பாளர், நடிகர்,பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளுடன் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கோலிவுட் டாப் நடிகர்களுடன் சரிக்கு சரியாக போட்டிபோடும் அளவுக்கு சிவகார்த்திகேயன் உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் அவரின் கடுமையான உழைப்பு என்று சொல்லாம்.
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சிவகார்த்திகேயன், கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
யார் மீதும் கோபம் இல்லை
சிவகார்த்திகேயன் அளித்து பேட்டியில், எனக்கு வாய்ப்பு கொடுக்காதவர்களின் மீது நான் என்னைக்கும் கோவப்பட்டது இல்லை. முதல் முதலில் ஆங்கரிங்கில் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது, கூட என் மீது தான் எனக்கு கோபம் வந்தது என்னை நானே தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.வாய்ப்பு தரவில்லை என்பதற்காக அவர்கள் மீது எப்போதும் கோவப்படமாட்டேன், கோவபட்டதும் இல்லை என்றார்.

கடுமையாக உழைத்தேன்
என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய உழைப்புதான், அதுமட்டும் இல்லாமல் என்னை தேடிவந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். எந்த வாய்ப்பையும் தவறவிட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். கலக்கப்போவது யாரு டைட்டில் வின் பண்ணதும், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், அதன் பிறகு விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன் இதற்கு அனைத்திற்குமே காரணம் என் உழைப்புதான் என்றார்.

ரீப்ளேஸ் செய்ய யாரும் இல்லை
ரஜினி,விஜய்,சிவகார்த்திகேயன் என்ற வரிசையை இப்போது மறுத்துப்பேச யாரும் முன்வர மாட்டார்கள். ஒருவேளை உங்களை இந்த பட்டியலில் ரீப்ளேஸ் செய்ய முடியும் என்றால், உங்களைப் பொருத்தவரை அது யார் என்ற கேள்விக்கு, இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், இருந்தாலும் என்னை ரீப்ளேஸ் செய்ய யாரும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

டான்
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் திரைப்படம் நேற்று வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.