மூத்த குடிமக்களின் சலுகையை பறிந்து 1500 கோடி ரூபாய் சம்பாதித்த ரயில்வே!

கொரோனா காரணமாக, ரயில் பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை கடந்த 2020 மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதன் மூலம் மட்டும் இந்தியன் ரெயில்வேக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 7.31 கோடி
மூத்த குடிமக்கள்
ரயிலில் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 60 வயதுடைய ஆண்கள் – 4.46 கோடி, 58 வயதுடைய பெண்கள் – 2.84 கோடி பேர்.

இவர்கள் மூலம் ரெயில்வேக்கு மொத்தம் 3464 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் கட்டண சலுகையை ரத்து செய்ததன் வாயிலாக 1500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் பயணக் கட்டண சலுகை ரத்து தொடர்பாக கேட்ட கேள்விகளின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

58 வயதுடைய பெண்களுக்கு 50 சதவீதமும், 60 வயதுடைய ஆண்களுக்கு 40 சதவீதமும் ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.