Elon Musk Twitter: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் சிஇஓ!

ட்விட்டர்
நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர்
எலான் மஸ்க்
சுமார் ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். அதனைத் தொடர்ந்து, பலத்தரப்பட்ட வதந்திகள் நிறுவனத்தை சுற்றி வந்தன. ஆனால், அதற்கு செவி சாய்க்காமல் எலான் மஸ்க் தனது பாணியில் புதிய ட்விட்டுகளை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், அதன் தலைமை செயல் அலுவலராக இருக்கும்
பராக் அகர்வால்
பதவிக்கு ஆபத்து என பல வதந்திகள் உலா வந்தன. அப்படி அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டால், எவ்வளவு தொகை கிடைக்கும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

இப்படியாக பல வதந்திகளுக்கு மத்தியில், ட்விட்டர் தலைமை செயல் அலுவலர் பராக் அக்ரவால், தனது கருத்தை ட்வீட்டுகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அதில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அனைவரும் பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Starlink Broadband: 32 நாடுகளில் தடம் பதித்த ஸ்டார்லிங்க் – இந்தியாவுக்கு எப்போது?

பராக் அக்ரவால் ட்வீட்

பராக் வெளியிட்டிருந்த நீண்ட ட்விட்டர் பதிவில், “கடந்த சில வாரங்களாக நிறைய நடந்துள்ளது. நான் நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். முன்னெப்போதும் இதன் நான் இவ்வளவு பகிரங்கமாகச் சொன்னதில்லை. ஆனால் இப்போது செல்கிறேன்.

எங்கள் தலைமைக் குழு மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களை அறிவித்துள்ளோம். மக்களை பாதிக்கும் மாற்றங்கள் எப்போதும் கடினமானவை. நிறுவனம் கையகப்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றங்களை குறித்து நாங்கள் அறிவோம். இதற்காக வதந்திகள் பரப்புவது எப்போதும் சரியாக இருக்காது.

ட்விட்டர் ஒப்பந்தம் முடிவடையும் வேளையில், எல்லா சூழ்நிலைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆனால், எப்போதும் ட்விட்டருக்கு சரியானதைச் செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனதில் உள்ளது. ட்விட்டரை முன்னின்று நடத்துவதற்கும் இயக்குவதற்கும் நான் தற்போது பொறுப்பாளியாக இருக்கிறேன். மேலும், ஒவ்வொரு நாளும் வலுவான ட்விட்டரை உருவாக்குவதே எங்கள் குழுவின் வேலை.

ட்விட்டர் ஊழியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் பணியில் பெருமை கொள்கிறோம். நிறுவனத்தின் எதிர்கால தலைமையை பொருட்படுத்தாமல், வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் Twitter-ஐ ஒரு நல்ல தயாரிப்பாகவும், வணிகத்திற்கான இடமாகவும் மேம்படுத்துகிறோம்.

Elon Musk Twitter: பதவியைத் துறந்த இரண்டு ட்விட்டர் நிர்வாகிகள் – காரணம் என்ன தெரியுமா?

ட்விட்டரின் நலனே முக்கியம்

இந்த தொழில்துறை மிகவும் சவாலான சூழலில் உள்ளது. நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்காக முக்கியமான முடிவுகளை எடுக்க நான் தயங்க மாட்டேன். எந்த தலைமை மாறினாலும் சரி; ட்விட்டர் நலனுக்காக முடிவுகள் எடுப்பதில், எனக்கு எந்த தடங்கலும் இல்லை.

எனவே என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? நான் இன்னும் வேலையைச் செய்வதில் கவனம் செலுத்துகிறேன். தேவைக்கேற்ப கடினமான முடிவுகளை எடுப்பது இதில் அடங்கும். எங்கள் சேவை மற்றும் எங்கள் வணிகத்தின் ஆழமான சிக்கல்களை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். மேலும், நல்ல மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

நாங்கள் செய்யும் வேலைகளில் இன்னும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயற்சிப்பேன். ட்விட்டரில் பொது உரையாடலை மேம்படுத்த எங்கள் குழுக்கள் செய்து வரும் முயற்சிகளை நீங்கள் அறிவீர்கள். புதிதாக ‘இன்றைய தலைப்பு’ என்று உருவாக்கப்பட்டுள்ளது. இது, பயனருக்கு தேவையில்லாத ட்வீட்டுகளை மறைத்து, புதிய ட்விட்டுகளை காட்டுகிறது.

இறுதியாக – எங்கள் முழு ட்விட்டர் குழுவிற்கும் மிகவும் நன்றி. அவர்கள் வலுவாக, கவனத்துடன் சுறுசுறுப்பாக சுழன்று வருகின்றனர். அவர்கள் எப்பொழுதும் செய்வது போல், அவரவர் வேலையைச் செய்து வருகிறார்கள். இன்னும் செய்வார்கள்!” என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலதிக செய்திகள்:

Elon Musk: ட்விட்டரை ஒப்படைக்கிறோன்; ஆனால் அதற்கு நான் இறக்க வேண்டும்!Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!Maadhaar App: கைக்குள் அனைத்தும் இருக்க கவலை ஏன்? எளிதாக ஆதார் கார்டு அப்டேட் செய்யலாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.