எலான் மஸ்க் "மனநலம் குன்றியவர்"….ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போலி கணக்குகள் குறித்த விவரங்களைத் தரும் வரை ஒப்பந்தத்தை தற்காலிகாலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இப்படி அடுத்தடுத்த அறிவிப்புகளால், எலான் மஸ்க் நிர்வாகப் பொறுப்பை ஏற்றபிறகு நிர்வாகம் எவ்விதம் இருக்கும் என்ற உறுதியான தகவல் இல்லாமல் ட்விட்டர் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், எலான் மஸ்க்கை மனநலம் குன்றியவர் என விமர்சித்துள்ளார். ட்விட்டர் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்த நிலையில், கருத்து சுதந்திரத்தை வழங்குவதற்காக ட்விட்டர் நிறுவனம் செயல்படவில்லை எனவும், அந்நிறுவனத்தில் கொள்கைகள் தவறான தகவல்கள் பரவுததைக் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்…ஆப்பு வைத்த எலான் மஸ்க்..

மேலும் ட்விட்டரை வாங்குவதாகக் கூறிய வார்த்தையை எலான் மஸ்க் நிறைவேற்றுவாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது எனக் கூறியுள்ள அவர், அவர் நகைச்சுவையாகப் பேசுகிறாரா அல்லது நிஜமாகப் பேசுகிறாரா என்பதை ஒருபோதும் கணிக்க இயலாது எனவும் கூறியுள்ளார். எலான் மஸ்க்கிற்கு ஆஸ்பெர்ஜர் (Asperger) எனப்படும் மனநலக் குறைபாடு இருப்பதாகக் கூறியுள்ள அவர், தவறான தகவல் பரவக் கூடாது என்ற கொள்கையை நீக்க வேண்டுமெனக் விரும்புகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்பெர்ஜர் என்பது ஆட்டிசம் போன்றே ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்கள் விதிமுறைகளில் அதிக கவனம் செலுத்துவதோடு, சிறிய சிறிய குறைகளையும் பெரிதாக்கிப் பேசும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். 

மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.