Twitter Deal: வெடிக்கும் சர்ச்சை! ஆதாரத்தை கோரும் எலான் மஸ்க்!

Twitter Deal: உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ்,
டெஸ்லா
போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான
எலான் மஸ்க்
, பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை வாங்கி உலக மக்களை ஆச்சரித்துக்குள்ளாக்கினார்.

ஆனால் மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடனேயே சர்ச்சைகளும் கிளம்பத் தொடங்கின. ஆரம்பத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு 3.3 லட்சம் கோடி ரூபாய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து
ட்விட்டர்
பங்கு சந்தையில் வீழ்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த Twitter-க்கு மேலும் ஒரு நெருக்கடியை Elon Musk கொடுத்துள்ளார். ட்விட்டரின் ஒப்பந்தத்திற்கான கோப்புகளில் வழங்கப்பட்ட தகவல்தான் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம்.

Elon Musk: எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் அனுப்பிய லீகல் நோட்டீஸ் – ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா?

ஆதாரம் கோரும் மஸ்க்

ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர்களின் கூற்றுப்படி, மஸ்க் இந்த ஒப்பந்தத்தை தடுத்துவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கு
பராக் அகர்வால்
ஆதாரம் அளிக்காததே காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சரி, எலான் மஸ்க் எந்த ஆதாரத்தைக் குறித்து பேசுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

எலோன் மஸ்க் டெஸ்லராட்டியின் ட்வீட்டுக்கு ஒப்பந்தம் குறித்த புதிய தகவலுடன் பதிலளித்தார். அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ட்விட்டருக்கான எனது சலுகை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது.

ட்விட்டரின் தலைமை செயல் அலுவலர், ஒப்பந்தத்தில் கூறியபடி, போட்கள் 5% விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார். மேலும் அது நிரூபிக்கப்படும் வரை ஒப்பந்தம் தொடராது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

WhatsApp Update: இனி லிங்க் தகவல்களை தெளிவாகப் பார்க்கலாம்!

நிறுத்தி வைக்கப்பட்ட ட்விட்டர் ஒப்பந்தம்

எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டார். கடந்த வாரம், தளத்தில் உள்ள போட்களின் எண்ணிக்கை அல்லது ஸ்பேம் கணக்குகள் குறித்த விவரங்கள் வழங்கப்படாததால், ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ட்விட்டர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு SEC தாக்கல் செய்ததில், அதன் தளங்களில் 5% மட்டுமே போட்கள் அல்லது ஸ்பேம் கணக்குகள் உள்ளது என்று கூறியிருந்தது. இதனை ஒத்துக்கொள்ளாத Tesla நிறுவனர் Elon Musk, அதற்கான ஆதாரங்களைக் கேட்டு ஒப்பந்தத்தை தற்காலிமாக முடக்கியுள்ளார். ட்விட்டரில் அதிகபடியான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளவும், பேச்சுக்கு சுதந்திரம் அளிக்கும் வகையிலும் பல முடிவுகளை எலான் மஸ்க் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்:

Netflix New Feature: நேரலை ஷோக்களை நடத்த நெட்பிளிக்ஸ் திட்டம்!Oppo Reno 8: இது சாம்சங் போனா… இல்ல ஒன்பிளஸ் போனானு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!Dangers Of Smartphones: தற்கொலைக்கு தூண்டுகிறதா ஸ்மார்ட்போன் பயன்பாடு – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.