ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?

இன்னும் பழைய மென்பொருளை பயன்படுத்தும் ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு உயர் அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையப் பாதுகாப்பு அலுவலகம் ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பழைய மென்பொருளைப் பயன்படுத்தும் மேக் பயனர்களுக்கு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) அதிக ஆபத்துள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உங்கள் Safari பிரவுசரில் 15.4 க்கு முந்தைய பதிப்பை இயக்கினால், உங்கள் சாதனத்தை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. முந்தைய Safari பதிப்புகளில் ஹேக்கர்களால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
MacBook Pro 14-inch and MacBook Pro 16-inch - Apple (IN)
இந்த வார தொடக்கத்தில், ஆப்பிள் ஐபோன் மற்றும் மேக் சாதனங்களுக்கான புதிய மென்பொருள் புதுப்பிப்புகளை வெளியிட்டது. iPhone மற்றும் iPad க்கு, இது iOS 15.5ஐ வெளியிட்டது. மேக்கைப் பொறுத்தவரை, ஆப்பிள் மேகோஸ் மான்டேரி 12.4 புதுப்பிப்பை வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக Safari பிரவுசரும் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு திருத்தங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.
Some Apple IPhone Users Are Facing Battery Drainage Problem After IOS 15.4  Update: All Details
அப்டேட் செய்யாமல் பழைய மென்பொருளை பயன்படுத்தும்போது சாதனங்களில் தீங்கிழைக்கும் பயன்பாடுகளை ஹேக்கர்கள் நிறுவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையப் பாதுகாப்பு அலுவலகம் ஆப்பிள் பயனர்களுக்கு அவர்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.