இந்த ஆண்டு உங்கள் மேனேஜர் சம்பளம் 9% உயரும்.. உங்களுக்கு எவ்வளவு உயரும்?

இந்திய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 8.9 சதவீத சம்பள உயர்வைப் பெறுவார்கள் என சர்வே முடிவுகள் கூறுகின்றன.

2022-ம் ஆண்டு இந்திய நிறுவனங்களின் முக்கிய ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கணக்ககெடுப்பை ஏஓன் நிறுவனம் எடுத்துள்ளது.

150 பேரை பணிநீக்கம் செய்த நெட்பிளிக்ஸ்.. அதிர்ச்சியில் இருக்கும் ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!!

எந்த துறையில் அதிகம் இருக்கும்

எந்த துறையில் அதிகம் இருக்கும்

உற்பத்தி (9.3%), தொழில்நுட்பம் (9.2%), ஐடி சேவைகள் (9.2%), வாழ்க்கை அறிவியல் (8.4%) மற்றும் நிதி (8.2%) என்ற வகையில் பல்வேறு துறைகளில் இந்த ஆண்டு அதிக சம்பள உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. 2021-ம் ஆண்டு இது 0.4 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைவாக இருந்தது.

முந்தைய ஆண்டுகள்

முந்தைய ஆண்டுகள்

இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள், 2016-ம் ஆண்டு 9.6 சதவீத சம்பள உயர்வை பெற்றார்கள். 2019-ம் ஆண்டு அதுவே 8. சதவீதமாக குறைந்தது. 2020-ம் ஆண்டு 5.1 சதவீதமாக சரிந்தது. 2021-ம் ஆண்டு 7.9 சதவீதமாக உயர்ந்தது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் இது பெரும் அளவில் சரிந்து காணப்பட்டது.

இந்திய நிறுவனங்களின் எதிரபர்ப்பு
 

இந்திய நிறுவனங்களின் எதிரபர்ப்பு

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய நிறுவனங்கள் திறமையாளர்கள் உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே திறமையாக உள்ளவர்களை நோக்கி திரும்பியுள்ளார்கள்.

கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து, திறமையானவர்களுக்குத் தேவை அதிகம் உள்ளது. வணிகத்தை வளர்க்கும் தலைமைத்துவ திறமைகளை ஈர்ப்பது, தக்க வைத்துக் கொள்வது மற்றும் ஈடுபடுத்துவதற்கான செலவும் வேகமாக அதிகரித்து வருகிறது, என ஏஒன் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் சேதி தெரிவித்துள்ளார்.

தலைமை அதிகாரிகள்

தலைமை அதிகாரிகள்

இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள 475 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் 60 சதவீதம் உயரவாய்ப்புள்ளது. சராசரியாக தலைமை நிர்வாக அதிகாரிகளின் வருடாந்திர நீண்ட கால ஊக்கத்தொகை நிலையான ஊதியத்தில் 125% ஆகும். இவர்களை தொடர்ந்து வரும் தலைமை செயல்பாட்டு அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, விற்பனைத் தலைவர் மற்றும் தலைமை மனித வள அதிகாரி உள்ளிட்ட C-நிலை நிர்வாகிகளுக்குச் சம்பளம் 50 சதவீதமாக உள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

டிரெண்டில் இல்லாத நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு வருடத்தில் நல்ல ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிர்வாகிகளின் சராசரி சம்பளம் மட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் அவர்களது ஊக்கத்தொகை, பங்குகள் என பலவும் அதிகரித்துள்ளது. அதற்கு திறமை வாய்ந்த நபர்களை நிறுவனங்கள் இழக்க விரும்பாததே காரணம் என கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top executives may get 9% hike: Survey

Top executives may get 9% hike: Survey | உங்கள் மேனேஜர் சம்பளம் 9% உயராம்.. உங்களுக்கு எவ்வளவு உயரும்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.