கடனட்டை வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் தினந்தோறும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கடன் அட்டை வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதுடன் மேலும் நிலுவை தொகை அதிகரிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் நிலுவையில் உள்ள கடன் அட்டை நிலுவை 3.9 பில்லியன் ரூபாவிலிருந்து 138.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்று மாதங்களில் கடன் அட்டை மீதி 5.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் அட்டை நிலுவைகளில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டாலும் அதற்கான வட்டி விகிதங்களை செங்குத்து முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை கருத்தில் கொண்டு அட்டையை பயன்படுத்த முன்னர் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள்.

பொருளாதாரத்தில் வேகமாக அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை பிரதிபலிக்கும் வகையில், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி விகித உச்சவரம்புகளை மத்திய வங்கி நீக்கிய பின்னர், வங்கிகள் உடனடியாக தங்களது கடன் அட்டை நிலுவை தொகையின் மீதான வட்டி விகிதங்களை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இது வாடிக்கையாளர்களின் அடுத்த கடன் கடன் சுழற்சியில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

இதற்கிடையில் வங்கிகள் தங்கள் கடன் தரங்களை கடுமையாக்கி உள்ளதுடன், கடன் அட்டைகளுக்கான விண்ணப்பங்களை குறைத்து வருவதுடன் சில வங்கிகள் விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கான காரணங்களைக் கூட தெரிவிக்காமல்  நடந்து கொள்கின்றன.

எவ்வாறாயினும், கடன் அட்டை உரிமையாளர்கள் அட்டையின் முழுத்தொகையை பயன்படுத்திய பின்னர் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதனால், வங்கிகள் தமது கடன் அட்டை வாடிக்கையாளரிடமிருந்து கடனை திரும்ப பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடன் பெற்றுக்கொண்டவர்களில் மற்ற அனைத்து கடன்களும் செலுத்திய பின்னரே இறுதியாக கடன் அட்டைகளுக்கான கடன் அடைக்கப்படுவதனால், கடன் அட்டை மூலம் கடன் வழங்கிய வங்கிகள் கடன் அட்டை வாடிக்கையாளரிடமிருந்து கடன்களை திரும்ப பெற முடியாமல் அறவிடமுடியா கடன்களால் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன.

எவ்வாறாயினும் முதல் மூன்று மாதங்களில் 38 ஆயிரத்து 201 அட்டைகளும் குறிப்பாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மார்ச் மாதத்தில் மட்டும் 18,716 புதிய அட்டைகளை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

K.Sayanthiny

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.