சென்செக்ஸ் 1000+ புள்ளிகள் சரிவு.. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வட்டி விகித உயர்வு, பணவீக்கம் ரூபாய் மதிப்பு சரிவு என கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் பெரும் அளவில் சரிந்துள்ளது. புதிதாக பங்குச்சந்தை முதலீடு செய்ய வந்தவர்களுக்கு அது பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் லாபமும் சரிந்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு இதுபோன்ற வலிகளை நாம் பொருத்துத்தான் ஆக வேண்டும். ஆனால் இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சந்தையைச் சரியாகச் செயல்பட வைக்கத் தான் என்பது அனுபவ முதலீட்டாளர்களுக்குத் தெரியும்.

டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய 3 அதிகாரிகள்.. ஆட்டம் காணும் அஸ்திவாரம்..!

எனவே சந்தையில் இப்படி நிலையற்ற தன்மை இருக்கும் போது மியுச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

 சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் என்பது கட்டாயமான ஒன்று. அது சில நேரங்களில் மிதமாக இருக்கும், சில நேரங்களில் அதிகமாக இருக்கும். ஆனால் அது சில நாட்களில் சரியாகிவிடும். நாம் ஒரு முதலீடு செய்யும் போது 2 முதல் 5 சதவீதம் வரையில் ஏற்ற இறக்கம் என்பது சாதாரண ஒன்று. அது 10 சதவீதத்திற்கும் அதிகமாக செல்லும் போது முதலீட்டாளர்கள் அவர்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பங்குச்சந்தையில் இப்போது ஏற்பட்டு வரும் திருத்தங்கள் எதிர்காலத்தில் மிண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். இதற்கு முன்பும் 2000, 2009, 2017, 2020-ம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காகப் பங்குச்சந்தையில் திருத்தங்கள் ஏற்பட்டு மீண்டும் அது லாபத்திற்குத் திரும்பியுள்ளது. பயப்படாமல் கவனமாக முதலீடு செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். சந்தை சரியும் போது குறைந்த விலைக்கு பங்குகளை வாங்குபவர்கள் விலை அதிகரிக்கும் போது நல்ல லாபத்தை பெறுவார்கள்.

நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா?
 

நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா?

பங்குச்சந்தை அதிக ரிஸ்க் உள்ள முதலீடு தான். ஆனால் நீண்ட காலத்திற்குத் திட்டமிட்டு அதில் முதலீடு செய்யும் போது நல்ல லாபத்தை பார்க்கலாம். அது நாம் எடுக்கும் ரிஸ்க்கை பொருத்தத்து. சில நேரங்களில் பெரும் நட்டத்திற்கும் நாம் செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நேரத்தை விட, முதலீடு செய்வது பற்றி ஆராய்ச்சி செய்வது முக்கியம்.

எடுத்துக்காட்டாக, 40 வயது வரையிலான முதலீட்டாளர்கள் தங்கள் மொத்த போர்ட்ஃபோலியோவில் குறைந்தபட்சம் 70 சதவீதத்தைப் பங்குகளை வைத்திருக்க முடியும். 40-55க்கு இடைப்பட்டவர்கள், 30-60% குறைந்த பங்கு ஒதுக்கீட்டைக் அவர்களுக்கான கால சூழலுக்கு ஏற்றவாறு கருத்தில் கொள்ளலாம். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுவதை நெருங்கும் போது பங்குச்சந்தை முதலீட்டை குறைத்துக்கொள்வது நல்லது.

எஸ்ஐபி முதலீட்டை நிறுத்த வேண்டாம்?

எஸ்ஐபி முதலீட்டை நிறுத்த வேண்டாம்?

சந்தை சரியும் போது ஏற்கனவே எஸ்ஐபி மூலம் வங்கி இருக்கும் யூனிட்களின் மதிப்பு சரியும் தான். ஆனால் இந்த சூழலில் கூடுதலாக முதலீடு செய்யும் போது அது உங்கள் லாபத்தை அதிகரிக்க உதவும். நீண்ட காலத்திற்குத் திட்டமிட்டு முதலீடு செய்பவர்களுக்கு எஸ்ஐபி ஒரு நல்ல பழக்கம் போன்றது. நல்ல பழக்கத்தை இடையில் நிறுத்திவிட்டால் அதை மீண்டும் தொடருவது கடினம். மேலும் எஸ்ஐபி முதலீட்டை வெளியிலும் எடுக்க வேண்டாம்.

 கூடுதல் முதலீடு செய்யுங்கள்

கூடுதல் முதலீடு செய்யுங்கள்

உங்களிடம் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தால், அதை ச-தை சரியும் போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ஏற்கனவே அதிக விலைக்கு ஒரு பங்கை வாங்கி இருந்தாலும், அது மீண்டும் உயரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் கூடுதல் முதலீடு செய்யலாம்.

மொத்த முதலீடுகளைச் செய்யாதீர்கள்

மொத்த முதலீடுகளைச் செய்யாதீர்கள்

ஒருவேலை உங்களிடம் அதிக பணம் தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்பதற்காக, அதையும் ஒட்டுமொத்தமாக சந்தையில் முதலீடு செய்ய கூடாது. பல்வேறு துறையில் பிரித்து, எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியுமோ அதை மட்டும் ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டும். மீதத்தைப் பாதுகாப்பான ரிஸ்க் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

ஏற்ற இறக்கத்தை பயன்படுத்திக்கொள்ளவும்

ஏற்ற இறக்கத்தை பயன்படுத்திக்கொள்ளவும்

சந்தை ஏற்ற இறக்கம் செல்வம் உருவாக்க ஒரு சரியான வாய்ப்பு. முதலீட்டாளர்கள் சந்தை நிலையற்ற தன்மையாக இருக்கும் போது பின்வாங்கக் கூடாது. பணத்தை சம்பாதிக்கச் சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும்.

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு

கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ், கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex plunges 1000+ points: What Mutual Fund Investors Should When The Stock Market Goes Down

சென்செக்ஸ் 1000+ புள்ளிகள் சரிவு.. மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Story first published: Thursday, May 19, 2022, 15:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.