ஆட்சேர்ப்பு முறைகேடு சம்பவத்தில் புதிய வழக்கு; லாலு வீட்டில் சிபிஐ சோதனை.! பீகாரில் பரபரப்பு

பாட்னா: கால்நடைத் தீவன ஊழல் விவகாரம் தொடர்பாக டொராண்டா கருவூலத்தில்  இருந்து சட்டவிரோதமாக பணம் எடுத்த வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும்,  பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர்  நீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் சில  நாட்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அவரது மூத்த  மகள் மிசா பாரதியின் டெல்லி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.வழக்கின்  விசாரணைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து  வரப்பட்டார். தற்போது அவர் ஓய்வெடுத்து வரும் நிலையில்,  லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் ஆகியோர் ரயில்வே பணியில் ஆட்சேர்ப்புகளில் முறைகேடு செய்ததாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. அதையடுத்து சிபிஐ போலீசார், பாட்னாவில் உள்ள லாலுவின் வீடு (தற்போது அவரது மனைவி ரப்ரி தேவி வசிக்கிறார்) உட்பட 15 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சோதனை நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இதனால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.