உலகளவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: உலகளவில் குரங்கம்மை வைரஸ் தொறின் தாக்கம் அதிகரிக்கும் வருகிறது. இதனையடுத்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு. காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள். குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

மேலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும். உலகையே கொரோனா தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஆஸி., ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

latest tamil news

ஆப்ரிக்க கண்டத்தில் காங்கோவில் கடந்த 2019ம் ஆண்டு குரங்கம்மை தாக்கம் அதிகரித்தது. இதற்கு சின்னமைக்கு அளிக்கும் மருந்தே அப்போது கொடுக்கப்பட்டது. பிரிட்டனில் கொரோனா தாக்கம் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச பயணிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது குரங்கம்மை தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து பிரிட்டனில் இதற்கு தடுப்பு மருந்து செலுத்த அந்நாட்டு சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.