பிரித்தானியாவில் மிகப்பெரிய தொகையை லொட்டரியில் வென்ற நபருடைய முன்னாள் மனைவி குறித்து வெளியாகியுள்ள சோக செய்தி


பிரித்தானியர் ஒருவருக்கு சமீபத்தில் லொட்டரியில் 184 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.

இங்கிலாந்திலுள்ள Cotswolds என்ற இடத்தில் வாழும் Joe Thwaite (49), அவரது மனைவியான Jess (44) என்னும் தம்பதியருக்கு, 184,262,899 பவுண்டுகள் லொட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது.

இந்நிலையில், Joe Thwaiteயின் முன்னாள் மனைவியான Sara Jane Frost (50)ஐக் குறித்து ஒரு சோக செய்தி வெளியாகியுள்ளது.

Joe மிகப்பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கி ஆடம்பர வாழ்விற்குத் தயாராகி வரும் நிலையில், Joeவுக்கும் Saraவுக்கும் பிறந்த Dominic(21), Sophie (20) என்னும் தன் இரண்டு பிள்ளைகளுடன், மாதம் ஒன்றிற்கு 900 பவுண்டுகள் வாடகைக்கு, வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறாராம் Joeவின் முன்னாள் மனைவியான Sara.

பிரித்தானியாவில் மிகப்பெரிய தொகையை லொட்டரியில் வென்ற நபருடைய முன்னாள் மனைவி குறித்து வெளியாகியுள்ள சோக செய்தி

அதற்கும் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

ஆம், அந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ளதால், Sara வேறு வீடு பார்க்கவேண்டியுள்ளதாம்.

இந்நிலையில், Saraவை நீண்ட காலமாக அறிந்த அவரது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவரது முன்னாள் கணவர் நினைத்தால் Sara தற்போது வாடகைக்கு வாழும் வீட்டை விலைக்கு வாங்கி அவருக்கே கொடுத்துவிட முடியும் என்றும் கூறியுள்ளார்கள்.

பிரித்தானியாவில் மிகப்பெரிய தொகையை லொட்டரியில் வென்ற நபருடைய முன்னாள் மனைவி குறித்து வெளியாகியுள்ள சோக செய்தி

அந்த வீட்டின் மொத்த விலையே 275,000 பவுண்டுகள்தான்!

இதற்கிடையில், தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்த விடயத்தை Saraவிடமும் கூறியிருக்கிறார் Joe. அவருக்கும் Joe தம்பதியருக்கு பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாம்.

2011ஆம் ஆண்டு Joeவைப் பிரிந்த Sara, வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்தத் திருமணமும் முறிந்துவிட, இப்போது தனியாக தன் பிள்ளைகளுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வரும்போதுதான், அந்த வீட்டையும் மாற்றவேண்டிய சூழ்நிலை Saraவுக்கு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானியாவில் மிகப்பெரிய தொகையை லொட்டரியில் வென்ற நபருடைய முன்னாள் மனைவி குறித்து வெளியாகியுள்ள சோக செய்தி

பிரித்தானியாவில் மிகப்பெரிய தொகையை லொட்டரியில் வென்ற நபருடைய முன்னாள் மனைவி குறித்து வெளியாகியுள்ள சோக செய்தி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.