தங்கம் விலை தொடர்ந்து உயருமா..? இப்போ தங்கம் வாங்குவது சரியா..?

அமெரிக்க டாலர் குறியீடு 20 ஆண்டு உச்சத்தில் இருந்து தொடர்ந்து, ரூபாய் மதிப்பு உயர்ந்தது மட்டும் அல்லாமல் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை 48,800 வரையில் குறையும் என எதிர்பார்த்த பலருக்கு சீனாவின் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு, மற்றும் வட்டி விகித குறைப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா..? சந்தை வல்லுனர்கள் கணிப்பு என்ன..?

பில் கேட்ஸ் கிரிப்டோ-வில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லையாம்.. ஏன் தெரியுமா..?

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கத்தின் விலை இந்த வாரம் பெரும்பாலான நாட்களில் உயர்வுடனே காணப்பட்டது. வெள்ளிக்கிழமை MCX சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 50,845 ஆகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையின் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1845 ஆகவும் முடிந்தது.

நாணய மதிப்பு

நாணய மதிப்பு

அமெரிக்க டாலர் (USD), இந்திய ரூபாய் (INR) மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஏற்பட்ட சரிவு ஆகியவை தங்கம் விலை மீண்டும் உயர வழிவகைச் செய்துள்ளது. இதனால் தங்கத்தை நீண்ட காலச் சேமிப்புக்காக வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

கணிப்பு
 

கணிப்பு

தற்போதைய வர்த்தகச் சூழ்நிலை தொடர்ந்தால் MCX சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 52,100 ரூபாய் வரையில் உயரலாம் என்றும், அதேவேளையில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் விலை 1780 டாலர் விலைக்குக் குறையாமல் வலுவான ஆதரவை முதலீட்டுச் சந்தையில் எதிர்கொள்ளும் எனக் கமாடிட்டி சந்தை நிபுணர்களின் தெரிவித்துள்ளனர்.

4 வார தொடர் சரிவு

4 வார தொடர் சரிவு

நான்கு வார தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்து பாதுகாப்பான நிலைக்கு உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு 20 ஆண்டுகள் உச்சத்தை அடைந்த நிலையில் தங்கம் விலை குறைந்தாலும் பிற நாணயங்கள் கொண்ட நாடுகளின் நாணய மதிப்பு சரிந்த காரணத்தால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் உள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

பலவீனமான ரூபாய் மதிப்புக் காரணமாகச் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவு முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதேவேளையில் இந்திய ரூபாயின் சரிவு இந்தியப் பங்குச்சந்தையை அதிகளவில் பாதித்தது மட்டும் அல்லாமல் விலைவாசியையும் அதிகரித்தது.

சாமானிய மக்கள்

சாமானிய மக்கள்

இதனால் சாமானிய மக்கள் வாங்கும் தங்கம் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் பணக்காரர்கள் இந்த விலை சரிவை பயன்படுத்திப் பங்குச்சந்தையைக் காட்டிலும் தங்கத்தில் அதிகளவான முதலீட்டைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை எப்படி இருக்கும்

தங்கம் விலை எப்படி இருக்கும்

இந்த நிலையில் தற்போது முதலீட்டு மற்றும் வர்த்தகச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் தங்கம் விலை 1820 முதல் 1860 டாலர் வரையில் இனி வரும் காலகட்டத்தில் தொடர்ந்து வர்த்தகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் தங்கம் விலை 51,000 முதல் 51,500 ரூபாய் வரையில் உயரலாம்.

10 கிராம் 22 கேரட் தங்கம் விலை

10 கிராம் 22 கேரட் தங்கம் விலை

  • சென்னை – 48,170 ரூபாய்
  • மும்பை – 47,050 ரூபாய்
  • டெல்லி – 47,050 ரூபாய்
  • கொல்கத்தா – 47,050 ரூபாய்
  • பெங்களூர் – 47,050 ரூபாய்
  • ஹைதராபாத் – 47,050 ரூபாய்
  • கேரளா – 47,050 ரூபாய்
  • புனே – 47,150 ரூபாய்
  • பரோடா – 47,150 ரூபாய்
  • அகமதாபாத் – 47,100 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 47,200 ரூபாய்
  • லக்னோ – 47,200 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 48,170 ரூபாய்
  • மதுரை – 48,170 ரூபாய்
  • விஜயவாடா – 47,050 ரூபாய்
  • பாட்னா – 47,150 ரூபாய்
  • நாக்பூர் – 47,150 ரூபாய்
  • சண்டிகர் – 47,200 ரூபாய்
  • சூரத் – 47,100 ரூபாய்
  • புவனேஸ்வர் – 47,050 ரூபாய்
  • மங்களுரூ – 47,050 ரூபாய்
  • விசாகபட்டினம் – 47,050 ரூபாய்
  • நாசிக் – 47,150 ரூபாய்
  • மைசூர் – 47,050 ரூபாய்

10 கிராம் 24 கேரட் தங்கம் விலை

10 கிராம் 24 கேரட் தங்கம் விலை

  • சென்னை – 52,550 ரூபாய்
  • மும்பை – 51,330 ரூபாய்
  • டெல்லி – 51,330 ரூபாய்
  • கொல்கத்தா – 51,330 ரூபாய்
  • பெங்களூர் – 51,330 ரூபாய்
  • ஹைதராபாத் – 51,330 ரூபாய்
  • கேரளா – 51,330 ரூபாய்
  • புனே – 51,380 ரூபாய்
  • பரோடா – 51,380 ரூபாய்
  • அகமதாபாத் – 51,400 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 51,480 ரூபாய்
  • லக்னோ – 51,480 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 52,550 ரூபாய்
  • மதுரை – 52,550 ரூபாய்
  • விஜயவாடா – 51,330 ரூபாய்
  • பாட்னா – 51,380 ரூபாய்
  • நாக்பூர் – 51,380 ரூபாய்
  • சண்டிகர் – 51,480 ரூபாய்
  • சூரத் – 51,400 ரூபாய்
  • புவனேஸ்வர் – 51,330 ரூபாய்
  • மங்களுரூ – 51,330 ரூபாய்
  • விசாகபட்டினம் – 51,330 ரூபாய்
  • நாசிக் – 51,380 ரூபாய்
  • மைசூர் – 51,330 ரூபாய்

ஒரு கிலோ வெள்ளி விலை

ஒரு கிலோ வெள்ளி விலை

  • சென்னை – 65900.00 ரூபாய்
  • மும்பை – 61400.00 ரூபாய்
  • டெல்லி – 61400.00 ரூபாய்
  • கொல்கத்தா – 61400.00 ரூபாய்
  • பெங்களூர் – 65900.00 ரூபாய்
  • ஹைதராபாத் – 65900.00 ரூபாய்
  • கேரளா – 65900.00 ரூபாய்
  • புனே – 61400.00 ரூபாய்
  • பரோடா – 61400.00 ரூபாய்
  • அகமதாபாத் – 61400.00 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 61400.00 ரூபாய்
  • லக்னோ – 61400.00 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 65900.00 ரூபாய்
  • மதுரை – 65900.00 ரூபாய்
  • விஜயவாடா – 65900.00 ரூபாய்
  • பாட்னா – 61400.00 ரூபாய்
  • நாக்பூர் – 61400.00 ரூபாய்
  • சண்டிகர் – 61400.00 ரூபாய்
  • சூரத் – 61400.00 ரூபாய்
  • புவனேஸ்வர் – 61400.00 ரூபாய்
  • மங்களுரூ – 65900.00 ரூபாய்
  • விசாகபட்டினம் – 65900.00 ரூபாய்
  • நாசிக் – 61400.00 ரூபாய்
  • மைசூர் – 65900.00 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold Price: How price changes in coming weeks; check gold price in Chennai, coimbatore, madurai

Gold Price: How price changes in coming weeks; check gold price in Chennai, coimbatore, madurai தங்கம் விலை தொடர்ந்து உயருமா..? இப்போ தங்கம் வாங்குவது சரியா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.