பெட்ரோல் விலை குறைப்பு முதல் சுங்க வரி வரை.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கியமான விஷயங்கள்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி குறைக்கவும், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சீரடைய இன்று பல முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதில் முக்கியமாக விலைவாசி உயர்வுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் பெட்ரோல், டீசல் முதல்.. சமையல் சிலிண்டர் மானியம், சுங்க வரி குறைப்பு, விவசாய உரம் வரையில் பல முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் நிர்மலா சீதாராமன்..

பணவீக்கம்

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றிய நாளில் இருந்து எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இதன் விளைவாக, எங்களது ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt reduces excise duty on petrol, diesel; Highlights of nirmala sitaraman announcement

Modi Govt reduces excise duty on petrol, diesel; Highlights of nirmala sitaraman announcement பெட்ரோல் விலை குறைப்பு முதல் சுங்க வரி வரை.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கியமான விஷயங்கள்..!

Story first published: Saturday, May 21, 2022, 19:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.