மைசூர் சாண்டல் சோப் உருவானது எப்படி தெரியுமா..?

சந்தன நறுமணத்தில் சோப் என்றால் நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது மைசூர் சாண்டில் சோப்பாக தான் இருக்கும். மைசூரை ஆட்சி செய்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த சோப் இப்போது கர்நாடகா சோப்ஸ் & டிடர்ஜண்ட் நிறுவனத்தின் கீழ் சோப்பை தயாரித்து வருகிறது.

1916-ம் ஆண்டு, மே மாதம் 10-ம் தேதி தொடங்கப்பட்ட மைசூர் சாண்டல் சோப் நிறுவனம் முதலில் சந்தன எண்ணெய்யைத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் மன்னர் நான்காம் கிருஷ்ண ராஜ உடையாரால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அப்போது முதல் உலகப்போரின் காரணமாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. எனவே அந்த திட்டத்தை மாற்றி சந்தன பவுடர், சந்தன எண்ணெய் கலவையில் 1918-ம் ஆண்டு சந்தன சோப் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம்.. முதல் இடம் யாருக்கு தெரியுமா..?!

பொதுத் துறை நிறுவனம்

பொதுத் துறை நிறுவனம்

மைசூர் சாண்டல் சோப்பிற்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. பின்னர் 1980-ம் ஆண்டு இந்த சோப் நிறுவனம் கர்நாடக அரசு கைக்கு சென்று பொதுத் துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. அதை கர்நாடகா சோப்ஸ் மற்றும் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் இப்போது விற்பனை செய்து வருகின்றனர்.

100% சுத்தமான சந்தன எண்ணெய் சோப்

100% சுத்தமான சந்தன எண்ணெய் சோப்

பொதுத்துறை நிறுவனமாக இதை மாற்றிய பிறகு சிமோகா, மைசூர் ஆகிய இடங்களிலிருந்த சந்தன எண்ணெய் தொழிற்சாலைகளை இதனுடன் இணைத்தனர். மைசூர் சாண்டல் சோப் ஒன்றுதான் உலகின் 100% சுத்தமான சந்தன எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சோப் என கூறப்படுகிறது.

புவிசார் குறியீடு
 

புவிசார் குறியீடு

அதை மேலும் உறுதி செய்யும் விதமாக 2006-ம் ஆண்டு உலகிலேயே மிகவும் இயற்கையாகத் தயாரிக்கப்படும் சோப் என்ற அந்தஸ்துடன் புவிசார் குறியீட்டையும் பெற்றது.

இந்தியாவில் இயற்கை முறையில் மைசூர் சாண்டல் மற்றும் சந்திரிகா சோப்புகள் தயாரிக்கப்படுகிறது. அதில் மிகவும் பிரபலாம ஒரு அரசு நிறுவனமாக மைசூர் சாண்டல் உள்ளது.

பிற தயாரிப்புகள்

பிற தயாரிப்புகள்

குளியல் சோப் மட்டுமல்லாமல் சலைவை சோப், ஊதுபத்தி, அரசு சாதன பொருட்கள், பேஸ் பேக் போன்றவற்றையும் மைசூர் சாண்டில் நிறுவனம் தயாரித்து விறிகிறது.

தோனி

தோனி

இந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியும் இருந்துள்ளார். 2012-ம் ஆண்டு 3 சதவீத சந்தன எண்ணெய் உடன் தயாரிக்கப்பட்ட 150 கிராம் சோப் மில்லினியம் என்ற பெயரில் 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய நறுமன சோப்புகள்

புதிய நறுமன சோப்புகள்

2017-ம் ஆண்டு முதல் ரோஸ் மில்க் கிரீம், ஜாஸ்மின் மில்க் க்ரீம், ஆரஞ்சு லைம், கொலோன் லாவெண்டர் மற்றும் ஃப்ரூட்டி நறுமனங்களிலும் மைசூர் சாண்டல் சோப் தயாரிக்கப்பட்டு வருகிது.

வருமானம்

வருமானம்

ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானமாக ஈட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7.22 சதவீத வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்று வருகிறது.

சர்ச்சை

சர்ச்சை

ஒருமுறை விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தை வாங்குகிறார் என செய்திகள் வெளியானது. பின்னர் ஊழியர்கள் செய்த போராட்டத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகக் கர்நாடக அரசு தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Iconic Mysore Sandal Soap Success Story

Iconic Mysore Sandal Soap Success Story | பாரம்பரியத்தின் சின்னம்.. மைசூர் சாண்டல் சோப் வளர்ந்தது எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.