உண்மையான நட்பு… நடிகர் கார்த்தி செய்த சிறப்பான செயல்… நெகிழ்ந்த யுவன்!

சென்னை : நடிகர் கார்த்தி சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். பருத்தி வீரனில் துவங்கிய இவரது சினிமா பயணம் தொடர்ந்து வருகிறது.

எந்தவிதமான கேரக்டரிலும் தன்னை பொருத்திக் கொண்டு தன்னுடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சோஷியல் நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இவரது அடுத்தடுத்த படங்களான சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாக உள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று போன்ற அதிரடி படங்களிலும், கைதி போன்ற கேரக்டர் ரோல்களிலும் பையா போன்ற சாக்லேட் பாய் கேரக்டர்களிலும் இவரை அழகாக பொருத்திக் கொள்கிறார். தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

சமூக நடவடிக்கைகள்

சமூக நடவடிக்கைகள்

சமூக நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் கார்த்தி. தன்னுடைய அண்ணன் சூர்யாவுடனும், தனியாகவும் பல சமூக பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது இதற்காக குரல் கொடுத்தும் வருகிறார். சினிமா தனது தொழில் அதைமட்டும் செய்யலாம் என்று இல்லாமல் இவ்வாறு இவர் நடந்துக் கொள்வது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

யுவனுக்கு கார்த்தி பரிசு

யுவனுக்கு கார்த்தி பரிசு

மேலும் உண்மையான நட்பை போற்றுவதிலும், பொக்கிஷமாக பாதுகாப்பதிலும் இவர் சிறப்பான பெயரை கோலிவுட்டில் பெற்றுள்ளார். தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டுகள் திரைத்துறை பயணத்தை பாராட்டும் வகையில் அவருக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

பள்ளித் தோழர்கள்

பள்ளித் தோழர்கள்

கார்த்தியின் பள்ளித் தோழராக யுவன் சங்கர் இருந்துள்ளார். இருவருக்குள் அப்போதிலிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. இதை பல நிகழ்ச்சிகளில் இருவரும் பகிர்ந்துள்ளனர். கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரனுக்கு யுவன்தான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன.

கார்த்தி படங்களுக்கு இசை

கார்த்தி படங்களுக்கு இசை

இதையடுத்து நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் தற்போது முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள விருமன் உள்ளிட்ட கார்த்தியின் பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்துள்ளார் யுவன். அவருக்குத்தான் தற்போது தங்களது நட்பின் அடையாளமாக விலையுயர்ந்த பரிசை அளித்துள்ளார் கார்த்தி.

ஆகஸ்ட் 31ல் விருமன் ரிலீஸ்

ஆகஸ்ட் 31ல் விருமன் ரிலீஸ்

கார்த்தியின் விருமன் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள கஞ்சா பூவு கண்ணால பாடலின் முன்னோட்டம் வெளியாகி 3.7 மில்லியன் வியூஸ்களை பெற்று தொடர்ந்து யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் ரிலீஸ்

தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்துவரும் கார்த்தியின் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. கல்கியின் வரலாற்று சிறப்புமிக்க நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் சர்தார் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Karthi gifs Yuvan for his completion of 25 years as a music director in Film Industry

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.