சென்னை : கமலிடம் கதை சொன்ன போது கையில் கதையே இல்லை, வெறும் ஒன் லைன் ஸ்டோரி மட்டுமே இருந்தது என்று விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தில், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் ஜூன் 3ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விக்ரம்
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படதிலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடி பாடல் பத்தல பத்தல சாங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் சர்ச்சையை கிளப்பினாலும் பாடல் மிகப்பெரிய அளவில் டிராண்டாகி வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழா
விக்ரம் படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பார்வையாளர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகமாகி இருக்கிறது. இப்படம் இந்திய அளவில் வரவேற்பைப் பெறும் ஒரு பான் இந்தியா படமாக இருக்கும் என கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ந்து வருகிறார்கள். இந்த படத்தின் முன்னோட்ட காட்சி பிரான்சில் நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

மனம் திறந்து லோகேஷ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், விக்ரம் திரைப்படம் எப்படி உருவானது என்பதை மனம் திறந்து கூறியுள்ளார். அதில், நான் கைதி படத்தின் டிரைலர் வெளியான போது கமல் என்னிடம் கைதி படம் குறித்து பேசினார். மேலும், கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு கமல் என்னை வெகுவாக பாராட்டினார்.

கைவசம் கதை இல்லை
அதன் பிறகு படம் கமல் தரப்பில் இருந்து இயக்குவதற்கு கதை இருக்கிறதா என கேட்டு அழைப்பு வந்தது. அப்போது, மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் கமலுக்கு சொல்வதற்கு கைவசம் கதை ஏதும் இல்லை. ஆனால், ஒன் லைன் ஸ்டோரி மட்டுமே இருந்தது.

இப்படித்தான் கதை உருவாச்சு
கமலை நேரில் சந்தித்து சார் தற்போது கதை ஏதும் இல்லை என்றும், ஒரு வரி மட்டும் தான் இருக்கிறது என்ற உண்மையை சொன்னேன். நான் இந்த கதையை பெரிதாக டெவலப் செய்கிறேன் எனக்கு இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டேன் அதற்கு கமல் ஒகே சொல்விட்டார். இப்படித்தான் விக்ரம் கதை உருவானதாக லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.