நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வரிவிலக்கு கேட்கும் தி.மு.க!

Puducherry DMK seeks tax exemption to Udhayanidhi Stalin’s Nenjuku Neeti movie: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வரி விலக்கு கோரி திமுக மனு அளித்துள்ளது.

திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. ஆர்க்கிள் 15 என்ற ஹிந்தி படத்தின் தழுவலான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். தன்யா, ஆரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த மே 20 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக ஒடி வருகிறது. இந்தநிலையில், இந்த திரைப்படத்திற்கு தி.மு.க.,வினர் வரி விலக்கு கோரியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: பேரறிவாளன் விடுதலையில் சோனியா குடும்பம் & ஸ்டாலினுக்கான மரியாதைக்கு இடையில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரி திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி தி.மு.க.வினர் இந்த திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். புதுச்சேரி சட்டமன்ற திமுக உறுப்பினர்கள் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்த குழு அளித்த மனுவில், அனைவரும் சமம் என்பதை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உள்ளதாகவும், எனவே இத்திரைப்படத்திற்கு கேளிக்கை வரியை ரத்து செய்து படக்குழுவை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.