உரிமம் இன்றி பஸ் ஓட்டிய ரேணுகாச்சார்யா மீது வழக்கு

தாவணகரே, : உரிமம் இல்லாமல், பஸ் ஓட்டிய முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.தாவணகரே ஹொன்னாளியின், பைரனஹள்ளி கிராமத்தில், பஸ் வசதியில்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.பஸ் வசதி ஏற்படுத்தும்படி, தொகுதி எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவிடம், வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால் சமீபத்தில் கிராமத்துக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வசதியை செய்து கொடுத்தார். தானே பஸ்சை ஓட்டி வந்தார். கிராமத்துக்கு பஸ் ஓட்டி வந்த எம்.எல்.ஏ.,வை பார்த்து, மக்கள் குஷியடைந்தனர். இதற்கு முன்பும் கூட, இவர் பஸ் ஓட்டி மக்களை கவர்ந்தார்.ரேணுகாச்சார்யா உரிமம் இல்லாமல், பஸ் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. போக்குவரத்து விதிமீறல் என்பதால் அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.