பிக் பாஸ் நான் ஸ்டாப் : டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 50 லட்சத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்!

சென்னை : பிக் பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ரூ.50 லட்சத்தை தட்டிச்சென்றார்.

பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ 12 வாரங்கள் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது.

மக்களின் மிகுந்த வரவேற்பு பெற்ற இந்த ரியாலிட்டி ஷோவை நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் தெலுங்கு நான் ஸ்டாப்

பிக் பாஸ் நான் ஸ்டாப் இன் கிராண்ட் ஃபினாலேவில் பிந்து மாதவி, அகில் சர்தக், அரியானா குளோரி, அனில் ரத்தோட், பாபா பாஸ்கர், மித்ரா சர்மா மற்றும் ஷிவா உள்ளிட்டோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.இதையடுத்து பிக் பாஸ் நான் ஸ்டாப் இன் கிராண்ட் ஃபினாலே மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அதிவி சேஷ், சாய் மஞ்ச்ரேக்கர் மற்றும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

பிக் பாஸ் தெலுங்கு நான் ஸ்டாப் நிகழ்ச்சியின் போட்டியாளராக நடிகை பிந்து மாதாவி டைட்டிலை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், அகில் சார்தக் ரன்னரப்பாகவும், தொகுப்பாளர் ஷிவா மூன்றாவது இடத்தையும் பிடித்தார். ஷிவாவுக்கு பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6க்கு செல்லும் பாஸ் வழங்கப்பட்டது.

பிந்து மாதவி

பிந்து மாதவி

தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதைத் தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார்.

பிந்து மாதவி ஆர்மி

பிந்து மாதவி ஆர்மி

இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பிந்து மாதவி கலந்து கொண்டு டைட்டிலை வென்றுள்ளார். இப்போது பிந்து மாதவி ஆர்மி என பல டிவிட்டர் மற்றும் ஹாஷ்டாக்குகள் தொடங்கப்பட்டன. தெலுங்கு ரசிகர்களுக்கிடையே இந்த நான்ஸ்டாப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது.

English summary
Bigg Boss Non Stop, the OTT edition of the reality TV series hosted by Nagarjuna Akkineni has concluded crowning Bindu Madhavi as the winner.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.