சவ்ரவ் கங்குலி பயோபிக்: இயக்கப்போவது ரஜினியின் மகளா?!

நடிகர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்துக்குப் பின்னர் கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை எனும் படத்தை இயக்கினார்.

இதிலும் நடிகர் தனுஷ் கெஸ்ட் ரோலில் வந்துபோனார். அதன் பின் சினிமா வீரன் எனும் டாகுமெண்ட்ரி படத்தை இயக்கிய அவர் அதற்குப் பிறகு எந்தப் படமும் இயக்கவில்லை. இதனிடையே தனுஷைப் பிரிந்த அவர், அடுத்ததாக எந்தப் படத்தை இயக்கப் போகிறார் எனும் கேள்வி இருந்துவருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளைக் காண்பதற்காக தனது மகன்களுடன் கொல்கத்தா சென்றுள்ளார் ஐஸ்வர்யா. விஷயம் அதுவல்ல; அங்கே சென்ற அவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவ்ரவ் கங்குலியையும் சந்தித்துள்ளாராம்.

டின்னர் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாம். இந்நிலையில் இந்தச் சந்திப்பின்போது சவ்ரவ் கங்குலியின் பயோபிக்கை எடுக்க, தான் மிகவும் விருப்பமாகவுள்ளதாகக் கங்குலியிடம் ஐஸ்வர்யா தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | 2022 ஐபிஎல்: அடேங்கப்பா.. சிக்ஸரில் இப்படியொரு சாதனையா?!

 

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாக வைத்து டாகுமெண்ட்ரி படம் எடுக்கப்பட்டுவிட்டது. முன்னாள் கேப்டன் தோனியின் பயோபிக்கும் வெளியாகிவிட்டது. இதையடுத்து கங்குலியின் பயோபிக்கும் எடுக்கப்படும் என நீண்ட நாட்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், இப்படியான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்குவாரா அல்லது பாலிவுட்டிலேயே வேறு யாரேனும் இயக்குவார்களா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

மேலும் படிக்க | ‘கிரிக்கெட் பரம்பரை’யிலிருந்து இன்னொரு எம்.பி?! – பாஜக மாஸ்டர் ப்ளான்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.