பழ.நெடுமாறனை நேரில் சந்தித்த பேரறிவாளன் – என்ன பேசினார் ?

சென்னை அடுத்த தாம்பரம் அருகே வேங்கைவாசலில் உள்ள தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாரனை  மரியாதை நிமித்தமாகப் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். பழ.நெடுமாறனுக்கு பேரறிவாளன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் சுமார் அரைமணி நேரம் பழநெடுமாறன் குடும்பத்தாருடன் உரையாடிவிட்டு அவரிடம் ஆசி பெற்றுச் சென்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன்:-  சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அமைச்சரவை இயற்றிய மசோசாதகளை ஆளுநர்கள் காலம் தாழ்த்துகிறார்கள். அமைச்சரவையில் உள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் அமைச்சரவையில் இயற்றப்படும் சட்டத்திற்கு ஆளுநர் ஓப்புதல் அளிக்கவேண்டும். ஆளுநர் குடியரசு தலைவரால் நேரடி நியமிக்கப்பட்டவர் தான், அவருக்கு என தனி அதிகாரம் கிடையாது என்று கூறினார். சட்டசபை தீர்மானத்தின் மீது எவ்வளவு நாட்களில் நடவடிக்கை எனக் குறிப்பிடப்படவில்லை என்பதை பயன்படுத்தி அவர்கள் அமைச்சரவை சட்டத்தின் மீது ஒப்புதல் அளிக்கத் தாமதப்படுத்துகிறார்கள் என்றார். 

Pazha Nedumaran,Perarivalan,Tambaram,arputham ammal

மேலும் படிக்க | கந்துவட்டி கொடுமையால் வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன்: 26 பேர் விடுதலைக்காக ஐயா தனி வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் எங்களுக்கும் நல்ல உறவு உண்டு, அந்த நன்றிக்காக சந்திக்க வந்துள்ளேன், என்றார்.

மேலும் படிக்க | கடல் வழியாக துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் – பழவேற்காட்டில் பதற்றம்.!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.