ரஜினியுடன் இளையராஜா திடீர் சந்திப்பு..ஆர்வத்தில் ரசிகர்கள்..எல்லாம் இதற்காகத்தானா?

சென்னை
:
நடிகர்
ரஜினிகாந்த்
தனது
அடுத்தப்
படத்தின்
சூட்டிங்கிற்காக
தற்போது
காத்திருக்கிறார்.
இந்தப்
படத்தை
நெல்சன்
இயக்குவது
உறுதியாகியுள்ளது.

இதையொட்டி
சமீபத்தில்
தனது
மகளுடன்
அமெக்காவிற்கு
சென்ற
ரஜினிகாந்த்
தனது
ரெகுலரான
மெடிக்கல்
செக்கப்பையும்
மேற்கொண்டார்.

இந்நிலையில்
இன்றைய
தினம்
இளையராஜா
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்தை
அவரது
வீட்டில்
சென்று
சந்தித்துள்ளார்.

ரஜினியின்
தலைவர்
169
படம்

அண்ணாத்த
படத்தை
அடுத்து
தனது
தலைவர்
169
படத்திற்கு
தயாராகி
வருகிறார்
ரஜினிகாந்த்.
அண்ணாத்த
படம்
அண்ணன்-தங்கை
பாசத்தை
மையமாக
வைத்து
இயக்குநர்
சிவா
இயக்கத்தில்
வெளியானது.
இந்தப்
படம்
கலவையான
விமர்சனங்களை
பெற்ற
நிலையிலும்
வசூலில்
சாதனை
செய்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி

நெல்சன்
இயக்கத்தில்
ரஜினி

இதையடுத்து
தற்போது
அடுத்ததாக
நெல்சன்
திலீப்குமார்
இயக்கத்தில்
நடிக்கவுள்ளார்
ரஜினிகாந்த்.
இந்தப்
படத்தின்
அறிவிப்பு
பீஸ்ட்
படத்திற்கு
முன்னதாகவே
மேற்கொள்ளப்பட்டது.
பீஸ்ட்
படத்தின்
கலவையான
விமர்சனங்களை
அடுத்து
இந்தக்
கூட்டணி
முறியுமா
என்று
எதிர்பார்க்கப்பட்டது.

விரைவில் சூட்டிங்

விரைவில்
சூட்டிங்

ஆனால்
தற்போதுவரை
இந்தக்
கூட்டணி
தொடர்வதாகவே
தெரிகிறது.
விரைவில்
இந்தப்
படத்தின்
சூட்டிங்
துவங்கவுள்ளது.
இந்நிலையில்
முன்னதாக
தனது
மகள்
ஐஸ்வர்யாவுடன்
ரஜினிகாந்த்
தனது
அமெரிக்க
பயணத்தை
மேற்கொண்டார்.
இது
அவரது
ரெகுலர்
மெடிக்கல்
செக்கப்பிற்கான
பயணம்
என்று
கூறப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்த இளையராஜா

ரஜினியை
சந்தித்த
இளையராஜா

இந்நிலையில்
இன்றைய
தினம்
இசைஞானி
இளையராஜா
நடிகர்
ரஜினிகாந்த்தை
அவரது
போயஸ்கார்டன்
இல்லத்தில்
சென்று
சந்தித்துள்ளார்.
இருவரும்
நீண்ட
நேரம்
மனம்
விட்டு
பேசியுள்ளனர்.
இதையடுத்து
தனது
ஸ்டூடியோவிற்கு
இளையராஜா
புறப்பட்டுள்ளார்.
தொடர்ந்து
அவருடன்
ரஜினியும்
அவரது
ஸ்டூடியோவிற்கு
சென்றுள்ளார்.

கோவையில் இசை நிகழ்ச்சி

கோவையில்
இசை
நிகழ்ச்சி

வரும்
ஜூன்
2ம்
தேதி
இளையராஜாவின்
79வது
பிறந்தநாளையொட்டி
கோவையில்
இசை
நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது.
இதையொட்டி
ரிகர்சலில்
ஈடுபடவே
இளையராஜா
தனது
ஸ்டூடியோவிற்கு
சென்றுள்ளார்.
அவருடன்
கூடவே
சென்ற
ரஜினி,
அங்கு
நடைபெற்ற
ரிகர்சல்களை
ஆர்வத்துடன்
கண்டு
களித்துள்ளார்.

ரிகர்சலை பாராட்டிய ரஜினி

ரிகர்சலை
பாராட்டிய
ரஜினி

மேலும்
சில
பாடல்களை
ஆர்வமுடன்
பார்த்து
கைத்தட்டி
ஆரவாரம்
செய்துள்ளார்.
பாராட்டும்
தெரிவித்துள்ளார்.
பின்னர்
சிறிது
நேரம்
கழித்து
அங்கிருந்து
புறப்பட்டு
சென்றுள்ளார்.
இரண்டு
லெஜெண்ட்கள்
எந்தவித
பந்தாவும்
இல்லாமல்
மனம்
திறந்து
பாராட்டுக்களை
பகிர்ந்து
கொண்டுள்ள
இந்த
சம்பவம்
இளம்
தலைமுறை
ஹீரோக்களுக்கு
மிகவும்
தேவையான
ஒன்று.

புகைப்படங்கள் பகிர்வு

புகைப்படங்கள்
பகிர்வு

இந்நிலையில்
இந்த
நிகழ்வுகளின்போது
இருவரும்
இணைந்து
எடுத்துக்கொண்ட
புகைப்படங்கள்
சமூக
வலைதளங்களில்
பகிரப்பட்டு
வைரலாகி
வருகின்றனர்.
ரசிகர்கள்
தொடர்ந்து
இந்தப்
புகைப்படங்களை
ஷேர்
செய்து
ட்ரெண்டாக்கி
வருகின்றனர்.
இளையராஜா
தொடர்ந்து
1400
படங்களுக்கு
மேல்
இசையமைத்துள்ள
நிலையில்,
அடுத்ததாக
அவரது
மாமனிதன்
படம்
ரிலீசாக
உள்ளது
குறிப்பிடத்தக்கது.

ரஜினியை இளையராஜா சந்தித்தது இதற்காகத்தானா?

ரஜினியை
இளையராஜா
சந்தித்தது
இதற்காகத்தானா?

ரஜினி
இளையராஜா
சினிமா
உறவு
நீண்டகால
உறவாகும்,
பதினாறு
வயதினிலே
தொடங்கி
ரஜினியின்
பல
ஹிட்
படங்கள்
இளையராஜா
இசையில்
வந்தது.
ரஜினி
இளையராஜாவை
சாமி
என்றும்,
இளையராஜா
ரஜினியை
சாமி
என்றும்
பரஸ்பரம்
அழைத்துக்
கொள்வார்கள்.
தனது
பிறந்த
நாளையொட்டி
கோவை
கொடிசியாவில்
நடக்கும்
பிரம்மாண்ட
கச்சேரிக்கு
ரஜினியை
இளையராஜா
தனிப்பட்ட
முறையில்
அழைத்திருக்கலாம்
என்று
தெரிகிறது.
ரஜினியும்
அதற்கு
சம்மதம்
தெரிவித்திருக்கலாம்
என்று
கூறப்படுகிறது.

English summary
Ilayaraja meets Rajinikanth in his Boyas garden home and Rajini visits ilayaraja studio

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.