வயிற்றில் இரத்த கசிவு… டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை… சிம்பு தகவல் !

சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி ராஜேந்தரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் டி ராஜேந்தருக்கு தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. மேலும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும் மேல் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் இணையத்தில் பரவியதை அடுத்து ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர். நான்கு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறார் ஆனால், ஊடகத்திலோ , சோஷியல் மீடியாவிலோ எந்த ஒரு தகவலும் இல்லாமல், இப்போது மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்வதாக கூறப்படுவதால், என்ன ஆச்சு என்ற கவலையில் ரசிகர்கள் உறைந்துள்ளனர்.

அது குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது ஆருயிர் ரசிகர்களுக்கும் , அன்பான பத்திரிகை , ஊடக நண்பர்களுக்கும் வணக்கம் . எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் , அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் . அங்கு பரிசோதனையில் , அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் , அவர் உடல் நலன் கருதியும் , உயர் சிகிச்சைக்காகவும் , தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் . அவர் முழு சுய நினைவுடன் , நலமாக உள்ளார் . கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து , உங்கள் அனைவரையும் சந்திப்பார் . உங்கள் பிரார்த்தனைகளுக்கும் , அனைவரின் அன்புக்கும் நன்றி என சிம்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Simbu’s report on T.Rajender ‘s health

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.