காவிரி டெல்டா பகுதிகளில்  82% தூர்வாரும் பணிகள் நிறைவு! அமைச்சர் துரை முருகன்

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில்  82% தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரை முருகன் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு திமுக ஆட்சி பதவி ஏற்றதும், ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர் வாரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, டெல்டா  பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில்  ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேட்டுர் அணையில் திறக்கப்படும் நீர், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் செல்லக் கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 115 பணிகள் எடுக்கப்பட்டு, 1200.56 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள்  தொடங்கியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீர் வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும். பணிகளை துரிதப்படுத்த சுமார் 150 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும்,  இப்பணிகள் அனைத்தும் 2022ம் ஆண்டு  மே மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். தூர்வாரும் பணிகளை அந்தந்த பகுதியிலுள்ள உழவர் குழுக்களின் கண்காணிப்புக் குழுவினர்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு சம்பா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை முன்னதாகவே இன்று திறக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் 82% நிறைவடைந்தாக அமைச்சர் துரை முருகன் விளக்கமளித்துள்ளார்.

மொத்தம் 4,964 கிலோ மீட்டரில் 4,047 கி.மீ இதுவரை தூர்வாரப்பட்டுள்ளதாகவும், கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் 210 கி.மீ தூரத்திற்கு தூர்வாறபடுகிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.