போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கத் தயார்: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்களன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து, அழிவை ஏற்படுத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியைக் கண்டறிய அவர் சந்திக்கும்  நினைக்கும் ஒரே ரஷ்ய அதிகாரி புடின் மட்டுமே, வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றும் போது ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவம் படையெடுத்ததற்கான பல சான்றுகள் உள்ள நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினமாகி வருவதாகத் தெரிகிறது, உக்ரைன் அதிபர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்

“ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். அவர் இல்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினால், அதனால் எந்த பயனும் இருக்காது,” என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ஜெலென்ஸ்கி கூறினார்.

“ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து வரும் எவருடனும் அதிபரைத் தவிர வேறு யாரையும் சந்திப்பதை என்னால் ஏற்க முடியாது. தற்போது உள்ள ஒரே பிரச்சினை போர் மட்டுமே. போரை நிறுத்துவது குறித்து மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்படும். வேறு எந்த வகையான காரணங்களும் இல்லை. ,” என்று உக்ரைன் தலைவர் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

போரின் உக்ரேனியர்கள் பெருமளவில் கொல்லபப்ட்டிருப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.நாட்டின் படைகள் கார்கிவ் அருகே முன்னேறி வருகின்றன. ஆனால் டான்பாஸில் நிலைமை மோசமாக  உள்ளது, அங்கு நாங்கள் பல மக்களை இழந்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.