TNPSC Group 2 Cut Off: ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு; கட் ஆஃப் குறையுமா?

TNPSC Group 2 exam 2022 cut off marks details here: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும்? எத்தனை வினாக்களுக்கு சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.

இதனிடையே, குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடைசி கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், அதே கட் ஆஃப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றிருந்தால், 100 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தகுதி செய்யப்படுவார்கள். எனவே, 5529 பணியிடங்களுக்கு 55000க்கும் அதிகமானோர் தேர்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது சுமார் 60,000 பேர் வரை அல்லது அதற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில், முதல்நிலைத் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் மற்றும் கணித வினாக்கள் சற்று எளிமையாக இருந்தாலும், பொது அறிவுப் பகுதி வினாக்கள் கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4, VAO Exam: புதிய சிலபஸ்; தேர்வு முறையை கவனமா பாருங்க!

இதனால் பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 145 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 140 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 135 – 140 வரையிலும், SC, SCA பிரிவினருக்கு 132-135 வரையிலும், ST பிரிவினருக்கு 130 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல.

அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு இதைவிட ஒரு சில வினாக்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் 120 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.