“தனுஷ் உலகின் சிறந்த கொலையாளிகளில் ஒருவர்" – `The Gray Man' இயக்குநர்களின் நெக்ஸ்ட் பிளான்!

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வால், எண்ட்கேம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கத்தில் நம்ம ஊர் ஸ்டார் தனுஷ் நடிக்க உருவாகி இருக்கும் ‘Grey Man’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ட்ரெய்லரில் தனுஷ் இரண்டு மூன்று பிரேம்களில்தான் வருகிறார். இது அவரின் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றத்தைக் கொடுத்தது. அப்படி கிடையாது தனுஷின் கேரக்டர் வேற லெவலில் இருக்கும் எனப் பேசியுள்ளனர் ரூஸோ பிரதர்ஸ்.

ட்விட்டர் ஸ்பேஸில் கிரே மேன் படம் குறித்து ரூஸோ பிரதர்ஸ் பேசியதாவது, “தனுஷ் உலகின் சிறந்த கொலையாளிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். படத்தின் ரயான் கேரக்டருக்கு பின் செல்லக்கூடிய கேரக்டர். படத்தில் அசாத்தியமான இரண்டு சண்டைக் காட்சிகள் தனுஷுக்கு உண்டு. நானும் ஆண்டனியும் தனுஷின் ரசிகர்கள். இந்த கேரக்டரை அவருக்காகவே எழுதியுள்ளோம். ஹீரோவோடு சண்டையிடும் படத்தில் திருப்பத்தை உண்டாக்கும் கிளாசிக்கான கெட்டவன் ரோல்.”

அனா டி ஆர்மஸ்

மேலும், “தனுஷ் நகைச்சுவையான மனிதர், தனித்துவமானவர். கேமராவில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கேரக்டர் கொஞ்சம் மாயத்தன்மையானது. ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் பிடித்திருந்தால் நாங்கள் இங்கிருந்து கூட கதையைத் தொடர்வோம். அப்படியான சுவாரசியமான கதாபாத்திரம்” என இயக்குநர்கள் தெரிவித்தனர்.

தனுஷின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இதன் சீக்குவல் படங்கள் உருவாகலாம் என்கிற ஹின்ட்டை இயக்குநர்கள் கொடுத்திருக்கின்றனர். தனுஷுக்கு ஆபத்து விளைவிக்கும் கேரக்டர். ரயான் கோஸ்லிங் பிடிபடாதவர், கிறிஸ் இவான்ஸ் நிறுத்த முடியாதவர், அனா டி ஆர்மஸ் தொட முடியாதவர் என நடிகர்களுக்கான கேரக்டர் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். படம் ஜுலை 15 திரையரங்குகளில் வெளியாகிறது. 22-ம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.