16 வயதில் கோடிக்கணக்கான சொத்து! தற்கொலை செய்து கொண்ட டீன் ஏஜ் இளம்பெண்

அமெரிக்காவை சேர்ந்த 16 வயதான நடிகையும், கோடீஸ்வரியுமான கைலியா போசே தற்கொலை செய்து கொண்டுள்ளார். Toddlers and Tiaras என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கைலியா. இவரின் சொத்து மதிப்பு $1.5 மில்லியன் ஆகும். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குடும்பத்தார் தெரிவித்துள்ளார். கைலியா குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறமையான பெண்ணான கைலியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருந்தது. துரதிஷ்டவசமாக பூமியில் வாழக்கூடிய வாழ்வை அவள் முடித்து கொண்டாள். கைலியாவின் மரணம் … Read more

இந்து சமய அறநிலையத்துறையில் 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த  30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில், 2021-22ம் ஆண்டுக்கு துணை ஆணையர் பதவிக்கு காலி பணியிட மதிப்பீடு நிர்ணயம் செய்வதற்கும் மற்றும் காலி பணியிட மதிப்பீட்டின் அடிப்படையில் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கு தேவையான உரிய செயற்குறிப்பினையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடிதத்தில் அரசுக்கு … Read more

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை: பயங்கரவாதிகள் ஊடுருவலா என போலீசார் சந்தேகம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.  பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தபோது, பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து மேலும் பயங்கரவாதிகள் வந்து செல்ல வசதியாக சில சுரங்கப்பாதைகள் எதுவும் தோண்டப்பட்டிருக்கிறதா என போலீசார் திவீர சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் 4 பேர் கைது

ஹரியானா மாநிலம் கர்னாலில் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் லூதியானாவைச் சேர்ந்த நபர் என்றும் இவர்களது பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்னல் எஸ்.பி. ராம் பூனியா கூறியதாவது:- கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடி பொருட்களுடன் … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,808-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.4,851-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.67.70-க்கு விற்கப்படுகிறது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்: டெல்லியில் அறிமுகம்

புதுடெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.  இதில், கட்டிட மேஸ்திரி, பெயின்டர், வெல்டர், தச்சு வேலை செய்பவர்கள், கிரேன் ஆபரேட்டர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம், டெல்லி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், கட்டுமான தொழிலாளர்கள் சிலருக்கு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இலவச பஸ் பாஸ்களை வழங்கி பேசியதாவது:முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச … Read more

ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்; காலில் விழுந்து வணங்கிய மாணவிகள்-இது தேர்வு சுவாரஸ்யம்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகளை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 192 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 22479 மாணவ மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர் இதற்காக மாவட்டம் முழுவதும் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேர்வு எழுதும் மாணவிகள் 100 தேர்வில் சதவீத வெற்றி பெற வேண்டும் என மாணவர்களுடன் … Read more

அரசியல் கட்சி எப்போது தொடக்கம்? புதிய விளக்கம் கொடுத்த பிரசாந்த் கிஷோர்

“அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு தற்போதைக்கு இல்லை” என்று பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அவரை கட்சியில் சேருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸில் இணைவார் என … Read more

மிர்ச்சி சிவாவின் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷாபி.என் இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ் ,அஞ்சு குரியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடங்களில் பாடகர் மனோ, மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷாரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பேண்டஸி கலந்த ரொமாண்டிக் காமெடி ஜானரில் … Read more

ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40 சதவீதமாக அறிவித்தது. எனவே வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் உயரும் என தமிழ் குட்ரிட்டர்ன்ஸில் தெரிவித்து இருந்தோம். அதை உறுதி செய்யும் விதமாக ஐசிஐசிஐ வங்கி தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் … Read more