திராட்சை விளைச்சல் அதிகரிப்பு: | Dinamalar

சிக்கபல்லாபூர்:சிக்கபல்லாபூரில் திராட்சை அமோகமாக விளைந்துள்ளது. ஆனால், நியாயமான விலை கிடைக்காததால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், 8,௦௦௦ ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் திராட்சை பயிரிடப்படுகிறது. கொரோனா, மழை இடையூறுகளுக்கிடையே விளைச்சலை பாதுகாத்தனர். இதன் பயனாக, அமோகமாக விளைந்துள்ளது. இம்முறை நல்ல லாபம் கிடைக்குமென, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து பெருமளவில் திராட்சை வருவதால், சிக்கபல்லாபூர் திராட்சைக்கு, மவுசு குறைந்து உள்ளது. தோட்டங்களில் செழிப்பாக வளர்ந்துள்ள திராட்சைகளை விற்க முடியவில்லை. இதை வாங்கும்படி, மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் மன்றாடும் … Read more

விஜய் 66வது படத்தில் இணைந்த யோகிபாபு

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் . இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் யோகிபாபு விஜய்யுடன் … Read more

IPO-வில் முதலீடு செய்ய அலைமோதும் எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள்.. என்ன காரணம்..?!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடும் எல்ஐசி நிறுவனம் அரசு நிறுவனமாக இருக்கும் காரணத்தால் சனிக்கிழமையும் முதலீடு செய்யச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் மாபெரும் 21000 கோடி ரூபாய் ஐபிஓ-வில் எல்ஐசி ஊழியர்களும், எல்ஐசி பாலிசிதாரர்களும் மற்ற பிரிவினரைக் காட்டிலும் அதிகப்படியான முதலீட்டை செய்துள்ளனர். இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்..?! தொடர்ந்து வெளியேறும் ஊழியர்கள்.. இருந்தாலும் 10.9% வருவாய் வளர்ச்சியில் காக்னிசென்ட்! எல்ஐசி எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 2ஆம் தேதி … Read more

பிரதி சபாநாயகராக ரஞ்ஜித் சியம்பலபிட்டிய மீண்டும் தெரிவு

பிரதி சபாநாயகராக, முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டி மீண்டும் இன்று (5) தெரிவானார். பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிக்கு 148 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு 65  வாக்குகள் அளிக்கப்பட்டன. கடந்த 2020 ஆகஸ்ட் 20 – தொடக்கம் நேற்று முன்தினம் வரை பிரதி சபாநாயகராக செயல்பட்டு வந்த ரஞ்ஜித் சியம்பலபிட்டிய,  தனது பதவியை இராஜிமா செய்ததையடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமானது. இதனால் இன்றைய தினம்  ,ஆளுந்தரப்பில் இருந்து முன்னாள் பிரதி சபாநாயகர் … Read more

கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை…அதிர்ச்சியூட்டும் காணொலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  ஷாங்காயைப் போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், … Read more

சென்னையில் அதிக எஃப்.எஸ்.ஐ மூலம் உயரமான கட்டிடங்களுக்கு அனுமதி; சாலைகளை விரிவாக்க முயற்சி

CMDA decides to allow high rise buildings in Chennai major roads with high FSI: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), முக்கிய சாலைகளில் உள்ள கட்டிடங்களின் தரை இடக் குறியீட்டை (FSI) அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நகரத்தில் உயரமான கட்டிடத்திற்கான அதிகபட்ச FSI 3.25 ஆகும். இது 50% பிரீமியம் FSI ஐப் பயன்படுத்தி 4.875 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CMDA திருத்தம் 6 முதல் 8 … Read more

காவல்நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கள்ளகாதலர்கள்.. திருப்பூரில் நடந்த சோகம்..!

திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஸ். இவருக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி11 மாத கைக்குழந்தை உள்ளது.  இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே பகுதியில் சின்னப்பையன் என்பவர் வேலை செய்து வந்தார். சின்னப்பையனும் சதீஸூம் நட்பாக பழகி வந்தனர். அப்போது, சின்னப்பையனுக்கும் சங்கீதாவிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக … Read more

ஸ்டாலின் தலைமையிலான திமுக-வின் ஓராண்டு ஆட்சி – மினி சர்வே #உங்கள்கருத்து

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. முதல்வராக ஸ்டாலினும் தனது ஓராண்டு பயணத்தைக் கடந்திருக்கிறார். ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பரவல், மழை வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களையும், சட்ட – ஒழுங்கு பிரச்னைகள், எதிர்க்கட்களின் விமர்சனங்கள், மத்திய அரசுடனான போக்கு, ஆளுநருடனான மோதல் என பல்வேறு அரசியல் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அப்படி, இந்த ஓராண்டுகால தி.மு.க-வின் `திராவிட மாடல்’ ஆட்சியில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உங்களுக்கான கேள்விகளை தொகுத்து … Read more

அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல்..!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருத்த சட்ட மசோதவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் அறிமுகம் செய்தார். குஜராத், தெலுங்கானா, கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணை வேந்தரை அரசின் இசைவுடன் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகச் சட்டத்திலும் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதன்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்ட மசோதா … Read more

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு ஓராண்டு சிறை: போக்சோ நீதிமன்றம்

சென்னை: 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டருக்கு ஓராண்டுசிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் டியூசன் மாஸ்டர் லோகநாதன் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு, டியூசன் படிக்க வந்த சிறுவனுக்கு லோகநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் தந்தை செம்பியம் அனைத்து … Read more