தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும் – டிடிவி தினகரன் ரமலான் வாழ்த்து.!

இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும் என்று, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் அந்த வாழ்த்து செய்தியில், “ரமலான் பெருநாள் வாழ்த்துகள்! – ஈகைத்திருநாளான ரமலானைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து பசித்திருப்பவனின் வலியை உணர்ந்து கொள்கிறார்கள். மேலும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் … Read more

03.05.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கார் மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்து விபத்து : காரில் இருந்தவர் தீயில் கருகி பலி

பழனி அருகே மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த காரில் பயணித்தவர் தீயில் கருகி உயிரிழந்தார். பழனி தாராபுரம் சாலை வழியாக சென்ற ஹோண்டா சிட்டி கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரியத் தொடங்கியது. அங்கிருந்த விவசாயிகளும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைப்பதற்குள், முழு காரும் தீப்பற்றி எரிந்ததால் காரில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

'அழகர் மலை அழகா, இந்த சிலை அழகா?' – கீழடி சிற்பம்; அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

சென்னை: கீழடியில் கிடைத்த சுடும் சிற்பத்தின் அழகை விவரிக்கும் விதமாக “அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வு முதல் 7வது கட்ட அகழ்வாய்வுகளில் இது வரை … Read more

வேளாண் சூழலியல், இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மை: இந்தியா – ஜெர்மனி இடையே கூட்டு பிரகடனம்  

புதுடெல்லி: இந்தியா – ஜெர்மனி இருநாடுகளுக்கு இடையில் வேளாண் சூழிலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் கூட்டு பிரகடனம் கையெழுத்தாகி உள்ளது. இதுகுறித்து இந்திய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா- ஜெர்மனி இடையே பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் … Read more

மக்களின் கடும் எதிர்ப்பு – காலி முகத்திடலில் பின்வாங்கிய கலகத்தடுப்பு பொலிஸார்

இன்று காலி முகத்திடலில் குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார், போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து மீளப் பெறப்பட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அந்த இடத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினரை எதிர்கொண்டனர். இறுதியில் பொலிஸார அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மேடையொன்றை அமைக்கத் தொடங்கியதை அடுத்து, கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மூத்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்கள் … Read more

பாம்பு தீவில் ரஷ்ய ரோந்து கப்பல்களை அழித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்

கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவில் இருந்த ரஷ்ய ரோந்து கப்பல்களை உக்ரைனிய ஆளில்லா விமானம் அழித்த சாட்டிலைட் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. பாம்பு தீவுக்கு அருகே திங்கள்கிழமை காலை உக்ரேனிய பைரக்டர் ஆளில்லா விமானத்தால் இரண்டு ரஷ்ய ராப்டார் ரோந்துப் படகுகள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கருங்கடலில் உள்ள தீவு அருகே ராப்டார் ரோந்து படகுகளில் ஒன்றை குறிவைத்து ட்ரோன் தாக்கிய வீடியோவை உக்ரைனிய பாதுகாப்பது அமைச்சகம் வெளியிட்டது. ரஷ்யாவால் பிரித்தானியாவை கடலுக்குள் … Read more

இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது- பெர்லின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

பெர்லின்: ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்  மோடி, அந்நாட்டு பிரதமர்  ஓலப் ஸ்கால்சை சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.   தொடர்ந்து  பெர்லினில் உள்ள  திரையரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஜெர்மனி வாழ் இந்திய சமூகத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அரசியல் நிலையற்ற சூழலுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 3 தசாப்தங்களாக இருந்த அரசியல் நிலையற்ற சூழலை இந்திய மக்கள் … Read more

நேரடி பண பரிமாற்ற திட்டத்தால் இந்திய பயனாளிகள் முழு பலனை பெறுகிறார்கள்- பெர்லின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

பெர்லின்: ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்  மோடி, அந்நாட்டு பிரதமர்  ஓலப் ஸ்கால்சை சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.   தொடர்ந்து  பெர்லினில் உள்ள  திரையரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெர்மனி வாழ் இந்திய சமூகத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அரசியல் நிலையற்ற சூழலுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியா முன்பு ஒரு தேசம், ஆனால் இரண்டு அரசியலமைப்பு இருந்தது. தற்போது ஒரு … Read more

ஆம் ஆத்மியின் 3 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மியை சேர்ந்த 3 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த மார்ச்சில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேறு எந்த அரசியல் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட ராகவ் சத்தா, அசோக் மிட்டால் மற்றும் சஞ்சீவ் அரோரா ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். மூன்று பேரும் நேற்று எம்பிக்களாக … Read more