பிரிட்டன் பில்லியனர்கள் உடன் போட்டிப்போடும் முகேஷ் அம்பானி.. எதற்காக தெரியுமா..?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறார். அதிலும் முக்கியமாகப் பிரிட்டன் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், பணவீக்கம் மோசமாக இருக்கும் இந்த வேளையில் சந்தையில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திப் பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது வரும் முகேஷ் அம்பானிக்குத் தற்போது மிகப்பெரிய தடை உருவாகியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகல்..? சமுக … Read more

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடை ஏறிய 82 வயது கவுண்டமணி: அபூர்வ வீடியோ

Tamil Cinema Update : தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் கவுண்டர்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள கவுண்டமணி காமெடி குணச்சித்திரம் ஹீரோ என பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் செந்திலுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் இன்றளவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று பெயரெடுத்த நடிகர் கவுண்டமணி, கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் … Read more

மேடையில் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு.! விக்ரம படத்தால் சிக்கலில் சிக்கிய கமல்.!

இதுவரை நான் ஒரு நடன உதவியாளர் ஆகவே நினைத்து வருவதாக நடிகர் கமலஹாசன் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐசரி வேலனின் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட கமலஹாசன், உடனே புறப்படும் காரணத்தினால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அனைவரிடமும் மேடையில் வைத்து கைகூப்பி மன்னிப்பு கேட்டு புறப்பட்டுச் சென்றார். … Read more

பால்வெளியில் இருக்கும் கருந்துளையின் முதல் புகைப்படம்… விஞ்ஞானிகள் சாதித்தது எப்படி?

முதல்முறையாக நம் பால்வெளியில் (Milky Way) இருக்கும் கருந்துளையை(Black Hole) படமெடுத்துச் சாதித்திருக்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். ஷஜிடேரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A*) என அழைக்கப்படும் இந்த கருந்துளை Supermassive Black Hole அல்லது SMBH என்று வகைப்படுத்தப்படும் மிகப்பெரிய கருந்துளை. இது நம் சூரியக்குடும்பம் இருக்கும் பால்வெளியின் நடுவில் மையம் கொண்டிருப்பதை இந்தப் புகைப்படம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இது மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஏன் தெரியுமா? கருந்துளை என்றால் என்ன? மனிதனைப் … Read more

ஒன்றிய கவுன்சிலர் மிரட்டியதால், ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே, ஒன்றிய கவுன்சிலர் மிரட்டியதால், ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாயனி குப்பம் ஊராட்சி செயலாளரான ராஜசேகர், தனது சகோதரருக்கு வேலை வாங்கி தருமாறு இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி அணைக்கட்டு ஒன்றிய திமுக கவுன்சிலர் ஹரியிடம் கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராததால் ராஜசேகர் பணத்தை திருப்பிக் கேட்ட போது, … Read more

பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து இறக்குமதி: மதுரையில் இரண்டாம் தர தக்காளி விலையே கிலோ ரூ.85

மதுரை; உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தும் இரண்டாம் தர தக்காளி விலையே இன்று ரூ.85 விற்பனையானது. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் தக்காளி வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர். அன்றாட சமையலில் தக்காளி அத்தியாவசிய காய்கறியாக உள்ளது. அதன் விலை திடீரென்று உயந்து, குறைந்து வந்தாலும் பெரும்பாலான நாட்களில் கிலோ ரூ.5 முதல் ரூ.15 வரை நிலையாக காணப்படும். ஆனால், கரோனாவுக்கு பிறகு தக்காளி விலையை நிர்ணயிக்கவே முடியவில்லை. திடீரென்று … Read more

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் விதிமுறை விரைவில் அரசால் வெளியிடப்படும் என, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்து உள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பவர், சுஷில் சந்திரா. இவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக, ராஜீவ் குமாரை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார். நாளையுடன் பதவிக் காலம் … Read more

இலங்கையில் ஒரே நாளில் அழிக்கப்பட்ட 2000 கோடி பெறுமதியான சொத்துக்கள்

இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களினால் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதற்கமைய இதுவரையில் 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காப்புறுதி செய்யப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு பெருமளவிலான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதால், காப்புறுதி நிறுவனங்கள் கடும் சிக்கலை … Read more

திரிபுரா புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு

திரிபுரா மாநில புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு அகர்தலாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு முதலமைச்சராக இருந்த பிப்லப் தேவ் பதவி விலகியதை அடுத்து புதிய முதலமைச்சர் தேர்வு   Source link

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் தேதி இரவு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆட்டோவில் வந்தபோது, வாகன சோதனை நடத்திய தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, வின்னேஷ் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். காவல்துறையினரின் கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாகவே விக்னேஷ் உயிரழந்துள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் … Read more