நிவின் பாலியின் துறமுகம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாள நடிகர் நிவின் பாலி, இயக்குனர் ராஜூவ் ரவி இயக்கத்தில் துறைமுகம் என்ற புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். துறைமுகம் பகுதியில் வாழும் மீனவ மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மீனவ மக்களுக்கு எதிராக நடந்த அநீதியை தட்டி கேட்கும் ஹீரோவாக நிவின் பாலி நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் … Read more

நான் என்ன வாத்தா..? கடுப்பான பராக் அகர்வால்..!! #Twitter

டிவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ பராக் அகர்வால் முக்கியமான நிர்வாக மாற்றங்களை அடுத்தடுத்து எடுத்து வரும் நிலையில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இதற்குப் பதிலடியை டிவிட்டர் பதிவு வாயிலாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை.. எங்கு, எப்போது. தொடங்கப்படும்? எலான் மஸ்க் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினால் முதல் ஆளாக வெளியேறுவது சிஇஓ பராக் அகர்வால் தான், இல்லையெனில் சிஇஓ பதவியில் இருந்து இறக்கப்பட்டுப் பிற பதவிகளில் அமர்த்தப்படுவார் என்பது 90 … Read more

பச்சை நிறமே பச்சை நிறமே! பாவாடை தாவணியில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். அதோடு, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். மூன்று சகோதரர்களைக் கொண்ட கூட்டுக் … Read more

ஒன்றிய கவுன்சிலர் தான் தற்கொலைக்கு காரணம்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலர் விபரீத முடிவு..!

ஊராட்சி செயலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் நாராயண குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஆண் குழந்தையும் உள்ளது. ராஜசேகர் அந்த கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் அவரது அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் … Read more

காங்கிரஸின் சிந்தனை அமர்வு மாநாடு ஹைலைட்ஸ்!

சோனியா காந்தி 5 மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராஜஸ்தானில் `சிந்தனை அமர்வு மாநாடு’ நடத்தப்போவதாக டெல்லியில் மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ் மே 13,14,15 என 3 நாள்கள் நடைபெறும் இந்த சிந்தனை அமர்வு மாநாடானது, காங்கிரஸில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. `ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுவதாகத் தகவல். மே 13, … Read more

அக்கா மகன் சரியாக படிக்காததால் அவரது நண்பர்களை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை

நாமக்கலில் அக்கா மகன் சரியாக படிக்காததால் அவரது நண்பர்களை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், இவரது அக்கா மகன் அகிலன், 10ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுரேந்தர் உள்ளிட்ட சில இளைஞர்களுடன் சேர்ந்துக்கொண்டு சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பிரபாகரன், சுரேந்தரிடம் விசாரிக்க சென்றபோது இருவருக்கும் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுரேந்தரின் நண்பர் விக்னேஷ் உள்ளிட்டோர் … Read more

சிசிடிவி கேமராக்களுடன் அரசுப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக … Read more

உ.பி. கியான்வாபி மசூதியில் கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த குழு அமைத்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் … Read more

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் … Read more

கழுத்தில் தாலி…. கையில் பேனா…. திருமணம் முடிந்த கையோடு செமஸ்டர் தேர்வு எழுதிய மணப்பெண்

கர்நாடகாவில் திருமணம் முடிந்த கையோடு கல்லூரி மாணவி ஒருவர் மணப்பெண் கோலத்திலேயே செமஸ்டர் தேர்வு எழுதியுள்ளார். பாண்டவபுராவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்றைய தினமே செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கிய சூழலில், காலையில் திருமணத்தை முடித்துவிட்டு, மணப்பெண் கோலத்திலேயே தேர்வறைக்கு சென்று அந்த மாணவி தேர்வு எழுதினார்.  Source link