பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற உதவும் ‛சூப்பர் நாய்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சாண்டியாகோ: சிலி நாட்டின் தலைகரில் உள்ள பூங்கா ஒன்றில் சேரும் குப்பைகளை வளர்ப்பு நாய் ஒன்று அகற்ற உதவுகிறது. பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்று செல்லமாக அழைக்கின்றனர்.

latest tamil news

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பூங்காவிற்கு நடை பயிற்சிக்காக வருபவர், கோன்சலோ சியாங். அவர் தன்னுடைய வளர்ப்பு நாயை கூட அழைத்து வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். ‛சாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஐந்தரை வயது நாய் உரிமையாளர் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது பூங்காவில் மாஸ்க்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் போன்றவற்றை அகற்றி பூங்காவை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

latest tamil news

இது வரை 602 மாஸ்க்குகள், 585 பாட்டில்கள், 304 கேன்கள் மற்றும் குப்பையாக வீசப்பட்ட பழைய துணிகள், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை பூங்காவிலிருந்து அகற்றி சுத்தமாக வைத்திருக்க தன்னுடைய நாய் உதவியுள்ளதாக அதனுடைய வளர்ப்பாளர் பெருமையாக கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.