கஜபா படையணியின் 'வீரர்களின் புயல்' கொபி புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கஜபா படையணியின் படைவீரர்களான புதிய பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே ஆகிய இருவரும் அவர்களின் சிறந்த படையணிக்கு நிரந்தர நினைவுகளைச் சேர்க்கும் வகையில், படையணியின் வரலாற்றின் பாரம்பரியம், அது நிறுவப்பட்டதில் இருந்து பரிணாமம், அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஒப்பிடமுடியாத இயற்கையின் போர்க்கள சாதனைகள், வீரம் மற்றும் தாய்நாட்டின் விடுதலையில் அதன் போர்வீரர்களின் இணையற்ற பங்களிப்பு போன்றவற்றை ஆவணப்படுத்திய புத்தகமான ‘போர்வீரர்களின் புயல்’ எனும் புத்தகத்தின் ஒரு பிரதியினை, முன்னாள் கஜபா படையணியின் அதிகாரியான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் வியாழன் (2) ஜனாதிபதி மாளிகையில் வழங்கினர்.

படையணியின் தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘coffee book’ திட்டம், கஜபா படையணி மன்ற உறுப்பினர்கள் குழுவால் தொகுக்கப்பட்டது, இது கடந்த காலத்தில் கஜபா படையணியின் செயல்பாட்டுக் கடமைகளை சித்திரக் கலைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கஜபா படையணியின் சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.