டெஸ்லா ஊழியர்கள் பணிநீக்கம்.. எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு..!

டெஸ்லா சீஇஓ எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் பணியை நிறுத்தி வைத்துள்ள நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

என்ன நடந்தது தெரியுமா..?

அதானி-க்கு ஆஸ்திரேலியா.. அம்பானி-க்கு பிரிட்டன்..!

டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம்

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் பிசியாக இருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்த நிலையில் நேற்று டெஸ்லா சிஇஓ-வான எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டது மட்டும் அல்லாமல், வாரத்தில் குறைந்தது 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் இப்போதே பணியை விட்டு வெளியேறலாம் என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.

அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு
 

அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு

இந்த அறிவிப்பின் தாக்கத்தில் இருந்து வெளியில் வராத டெஸ்லா ஊழியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார். இது டெஸ்லா ஊழியர்கள் மத்தியில் தாக்கத்தை மட்டும் அல்லாமல் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

இன்று எலான் மஸ்க் டெஸ்லா ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எனக்குப் பொருளாதாரம் குறித்துத் தவறாகத் தோன்றுகிறது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தப்பிக்க டெஸ்லா நிறுவனத்தின் இருந்து 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டும் நிலை வரலாம் என்றும், உலக நாடுகள் அனைத்திலும் புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் பணிகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

ப்ளூ / ஓயிட் காலர்

ப்ளூ / ஓயிட் காலர்

மேலும் டிவிட்டரில் டெஸ்லா நிறுவனத்தில் ப்ளூ / ஓயிட் காலர் ஊழியர்கள் குறித்த டிவீட்-க்கு எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் எல்லோருக்கும் ஓரே உணவு, ஓரே பாத்ரூம் தான். எங்கு எக்ஸ்கியூடிவ் சீப் அல்லது பிற கார்பரேட் நிறுவனங்கள் போல் எதுவும் இல்லை.

தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் என இரண்டு பிரிவுகள் இருக்கக் கூடாது. எல்லோரும் தொழிலாளர்கள் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk emails 10 percent Tesla employees layoff; Freeze hiring globally

Elon Musk emails 10 percent Tesla employees layoff; Freeze hiring globally டெஸ்லா ஊழியர்கள் பணிநீக்கம்.. எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு..!

Story first published: Friday, June 3, 2022, 15:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.