யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய்

யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கண்காணிப்பு பொறிமுறை ஊடாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட விவசாய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான கால அட்டவணைகளை மாற்றுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் உணவு வீண்விரயத்தை குறைத்து வீட்டுத்தோட்ட உற்பத்திகளை அதிகரித்தல், விதைகளின் தேவைப்பாடு, விதை நெல் தேவைப்பாடு மற்றும் விதை நெல் விலையை தீர்மானித்தல் , தென்னந்தொழிற்சாலை உற்பத்திகளை ஊக்குவித்தல் , சிறு போக மற்றும் பெரும்போக பசளைகளின் தேவை ஆகியன தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

மாவட்டத்தில் பாலின் விலையை நிலையாக பேணுதல், உள்ளூரில் பால் உற்பத்திகளை அதிகரித்தல், உள்ளூரில் கால்நடை தீவனத்தை பெற்றுக்கொள்வதற்குரிய நடைமுறைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் மக்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் கிடைக்க உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

விவசாயக் குழுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.