6G வருகையுடன் ஸ்மார்ட்போன் காலம் முடிவுக்கு வருமா?

மனிதர்கள் மொபைலைக் கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆனது. ஆனால் மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன் வரையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் 5ஜி நெட்வெர்க்கைத் தொடர்ந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி சேவை அமலில் இருக்கும் என நோக்கியா தலைமை செயல் அலுவலர் Pekka Lundmark கணித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது. இந்த கேஜெட்டுகளில் சில காலப்போக்கில் பின்தங்கிவிட்டன. அதன்படி, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் நின்றுவிடலாம். இந்த சகாப்தமும் முடிவுக்கு வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.

21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!

நோக்கியா தலைமை நிர்வாக அலுவலரின் கணிப்பு

Nokia CEO Pekka Lundmark கருத்துப்படி, “6G தொழில்நுட்பம் 2030க்குள் கிடைக்கும். ஆனால் அதுவரை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட்போன்களில் ‘பொதுவான இண்டர்பேஸ்’ இருக்காது” என்று டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் அவர் பேசினார்.

2030க்குள் 6G வணிக ரீதியாக கிடைக்கும் என்கிறார். ஆனால் அதற்கு முன், மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் பிற கேட்ஜெட்டுகளை விரும்புவார்கள்.

இதன் காரணமாக, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் இடைமுகமாக அதிகம் பயன்படுத்தப்படாது. பல அணியக்கூடிய பொருள்கள் உங்கள் உடலில் நேரடியாக நிறுவப்படும். இவ்வாறு தனது கருத்தை நோக்கியா சிஇஓ பதிவு செய்துள்ளார்.

Recharge Price Hike: தீபாவளி பரிசா இது! ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம்!

மூளையில் சிப்

எந்தெந்த சாதனங்கள் உடலுக்குப் பொருந்தும் என்பதை லண்ட்மார்க் கூறவில்லை. ஆனால் எலான் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) மற்றும் சில நிறுவனங்கள் தற்போது மூளைக்கு அருகில் பொருத்தக்கூடிய சிப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த சிப் மூளையில் கணினி போன்று செயல்படும். இந்த சிப் தற்போது மூளையில் இருந்து வரும் சிக்னல்களை பதிவு செய்து வருகிறது. சோதனையில் இருக்கும் இந்த தொழில்நுட்பங்கள் 6ஜி காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

Elon Musk Twitter: என்னையா திட்டுற… ஆத்திரத்தில் எலான் மஸ்க் பதிவிட்ட சவுக்கடி ட்வீட்!

6ஜி குறித்து பிரதமர் நரேந்திர மோடி

முன்னதாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் (TRAI) 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 5G சோதனையை அறிமுகப்படுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
அப்போது பேசிய பிரதமர், “நாடு 3ஜியில் இருந்து 4ஜிக்கும், தற்போது 5ஜி மற்றும் 6ஜிக்கும் நகர்கிறது. 2ஜி காலகட்டத்தின் ஏமாற்றங்கள், ஊழல்கள் மற்றும் கொள்கைத் தடைகளைக் கடந்து நாடு மாறி வருகிறது.

நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.