சனீஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்| Dinamalar

காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று தியாகராஜர் உன்மத்த நடன உற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

27ம் தேதி முதல் 29ம் தேதி வரை விநாயகர் உற்சவம், 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவம், 2ம் தேதி முதல் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது.நேற்று முன்தினம் செண்பக தியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருளினார். நேற்று வசந்த மண்டபத்தில் யதாஸ்தானம் உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜர் எழுந்தருளினார்.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.9ம் தேதி தேர் திருவிழா, 10ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 11ம் தேதி தெப்ப உற்சவம், 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.