தங்கம் விலை உயர்ந்தாலும் விற்பனை அதிகரிப்பு: என்ன காரணம் தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்தாலும் தங்கம் வாங்குபவர்களுக்கு சில சலுகைகளை நகைக் கடைக்காரர்கள் கொடுத்து வருவதால் தங்க நகைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகூர்த்த நாள் அதிகமாக இல்லாததால் தங்கத்தின் தேவை குறைந்து உள்ளது என்பதும், அதுமட்டுமின்றி தங்கத்தின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது.

தங்கம் விலை உயர துவங்கியது.. மீண்டும் மக்களுக்கு ஏமாற்றம்..!

தள்ளுபடி

தள்ளுபடி

இதனை அடுத்து தங்க நகை கடைக்காரர்கள் தங்கத்தை விற்பனை செய்வதற்காக சில தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். செய்கூலி சேதாரத்தின் சதவிகிதத்தை குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை பயன்படுத்தி தற்போது தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் சிலர் அதிகப்படியான தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

கமாடிட்டி

கமாடிட்டி

வெள்ளிக்கிழமை அன்று கமாடிட்டி சந்தையில் 10 கிராம் தங்கம் ரூபாய் 50 ஆயிரத்து 984 என விற்பனையானது. தங்கத்தின் விலை மே மாதத்தில் ரூ.49,500 என விற்பனையான நிலையில் தற்போது சுமார் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை
 

தங்கம் விலை

இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் தங்கத்தின் விலை சிறிது மாற்றம் ஏற்படலாம், சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில வரி, போக்குவரத்து செலவு ஆகியவை காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகமாக உள்ள நாடு இந்தியா தான் என்பதும் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கும், அணிகலன்கள் வாங்குவதற்கும் பெருமளவு செலவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியா தங்கச் சந்தையில் எப்போதும் முன்னணியில் உள்ளது.

சேமிப்புக்கு தங்கம்

சேமிப்புக்கு தங்கம்

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகளவு உயர்ந்து இருப்பதால் தங்கத்தின் விலை குறைந்தவுடன் வாங்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அவசிய தேவை இருந்தால் மட்டும் தங்கத்தை வாங்கிக் கொள்ளவும் என்றும் சேமிப்பு வகைக்காக தங்கத்தை இப்போது வாங்க வேண்டாமென்றும் இன்னும் இரண்டு மாதங்களில் தங்கம் விலை வீழ்ச்சி அடையும் என்றும் அப்போது தங்கத்தை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த முதலீடு

சிறந்த முதலீடு

ஆனால் அதே நேரத்தில் தங்கத்தை மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட அளவு வாங்கி சேமித்து வைத்து இருப்பவர்களுக்கு எப்போதுமே தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்றுதான் கூறப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jewellers offer discounts despite higher gold prices

Jewellers offer discounts despite higher gold prices | தங்கம் விலை உயர்ந்தாலும் விற்பனை அதிகரிப்பு: என்ன காரணம் தெரியுமா?

Story first published: Saturday, June 4, 2022, 23:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.