கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ராதாகிருஷ்ண விளக்கம்

கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், சுகாதாரத்துறை டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். திமுக அரசில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில், அண்மையில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் செய்தியாளர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூ 5) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்படுவதாக விளக்கம் அளித்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது என்றார்.

வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன என்றும் இதில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.4 பேருக்கு BA 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்.

அடுத்த அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கூறி வருவதால் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது.” என்று கூறினார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், “எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஒளிவு மறைவு இன்றிதான் டெண்டர் விடுகிறது. அதே மாதிரி, இது போல பிரச்னைகள் இருக்கும்போது, குறிப்பிட்ட பொருட்களில் அது குழந்தைகளுக்கானதா பெண்களுக்கானதா என்று சரிபார்க்கிறோம். குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உணவை மாற்றி ஒப்பிடக் கூடாது.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.