தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் – தமிழ்நாடு அரசு.! யார் இந்த அமல்ராஜ் ஐபிஎஸ்.!

தமிழ்நாடு முழுவதும் 44 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தாலி குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்தும், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவி அண்மையில் பணி ஓய்வு பெற்ற நிலையில், தமிழ்நாடு போலீஸ் அகாதமி இயக்குநராக உள்ள அமல்ராஜை தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 

கோவை மற்றும் சென்னையில் காவல் அருங்காட்சியகத்தை அமல்ராஜ் அறிவுரையின் படி கொண்டுவரப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றியமைக்காக குடியரசுத் தலைவர் பதக்கத்தை அமல்ராஜ்க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.