அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயா்வு

மும்பை,

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயா்ந்து 77.62 ஆக உள்ளது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 4 பைசா உயா்ந்ததால் 77.65 ஆக தொடங்கியது.

இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் 0.19 சதவீதம் அல்லது 106.93 புள்ளிகள் சாிந்து 55,662.30 ஆகவும், நிஃப்டி 0.16 சதவீதம் அல்லது 18.75 புள்ளிகள் சரிந்து 16,557.95 ஆகவும் இருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.