தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையின் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆந்திர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.