நான் லைலாவா… ஜோதிகாவா? – பாவனா

கேரள அழகிகளின் அணிவகுப்பில் அடுத்த வரவு பாவனா! அழகான : ஓவியம் போலிருக்கிற பாவனா, ” சித்திரம் பேசுதடி ‘ படத்தின் மூலம் : கோடம்பாக்கத்தில் குதித்திருக்கும். காக்டெய்ல்!

திருச்சூர் பொண்ணு கல்லூரிக்குள் காலடி வைக்கிற நேரத்தில், சினிமாவுக்கு கூட்டி வந்து விட்டார்கள்!

சித்திரம் பேச ஆரம்பித்தது. “ மலையாள இயக்குநர் கமல் சார் என்னை அறிமுகப்படுத்தினாலும் சிபிமலயில், ஜெயராஜ்னு முன்னணி இயக்குநர்களோட படங்களில் ஜெயராம், திலீப், மம்மூட்டி மோகன்லால்னு எல்லார் கூடவும் ஜோடி போட்டாச்சு.

அதான், தமிழிலும் ஒரு கை பார்த்துட லாம்’னு வந்திருக்கேன்! ” என்று ரஜினி ஸ்டைலில் தலை சிலுப்பிச் சிரிக்கிறார் பாவனா.

Exclusive Interview’s Bhavana

கன்னத்தில் நாலணா சைஸுக்கு அழகாக விழுகிறது ஒரு குழி! “நீங்க இன்னொரு லைலாவா… ஜோதிகாவா…? ” என்று கேட்டால்,

திரும்பவும் அதே சிரிப்பு ஹைய்யோ!

“என்னோட ‘சித்திரம் பேசுதடி’ பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க. இந்தப் படத்தோட இயக்குநர் மிஸ்கின் அறிமுக இயக்குநர். கேதிர், வின்சென்ட் செல்வாகிட்டே உதவியாளரா இருந்தவர். அவர் ‘சித்திரம் பேசுதடி’ கதையைச் சொன்னபோது, ஆஹா.. இதை மிஸ் பண்ணக்கூடாது’னு மலையாள வாய்ப்புகள் பலதையும் ஒதுக்கி வெச்சுட்டு ஓடிவந்துட்டேன்!

சாருமதினு கேரக்டர் பெயர். ஏழு கடல் தாண்டி, ஏழெட்டு மலை தாண்டி, ஒரு பூ இருந்தாக் கூட, தடதடனு தாண்டிப்போய் வெடுக்குனு பூப்பறிச்சுட்டு வர்ற துணிச்சல் பொண்ணு! கலகலனு ஆயிரம் ‘சரவாலா மாதிரி துள்ளத் துடிக்க வர்ற ஒரு பாத்திரம்.

நடிக்க பிரமாதமான ஸ்கோப் இருக்கு. எனக்கு ஜோடியா நடிக்கிற சுனில் குமாரும் கேரளத்துப் பையன்தான்! ‘4 தி பீப்பிள்’ படத்தில் : வர்ற நாலு ஹீரோவிலே ஒருத்தர்.

இதிலே நான் பிளாட்டினம் செயின்னா, அவர் சைக்கிள் செயின். ‘ஏண்டா இவனைக் காதலிச்சோம்? ‘ னு ஒரு பொண்ணு ஃபீல் பண்ணுவால்ல… அப்படி ஒரு மோதலும் காதலுமா : இருக்கு காட்சிகள். இதைக் கவிதை மாதிரி சொல்றதாலதான், ‘சித்திரம்: பேசுதடி’னு தலைப்பு! படம் பார்த்துட்டு, ‘தமிழுக்கு வந்த ஹோம் லியான ஹீரோயின்’னு சொல்வீங்க, பாருங்களேன் ” என்கிறார் பாவனா.

அதுசரி… இப்படித்தான் உங்க ஊர்ப் பொண்ணுங்க அசின், நயன்தாராலாம் இங்கே வந்தப்ப சொன்னாங்க. அப்புறம் அவங்க காட்டின கவர்ச்சி இருக்கே… நீங்க எப்படி? ”

ஆஹா.. ஆரம்பிச்சுட்டீங்களா…? நாங்க கரெக்ட்டாதான் வர்றோம். இங்கே வந்த பிறகுதான் அப்படி மாத்திடறீங்க!

மலையாள ரசிகர்கள் என்னை ஹோம்லி பொண்ணாத்தான் கொண்டாடுறாங்க. கண் நிறைய கனவோட கோடம்பாக்கம் வந்திருக்கேன். என்னைக் கவுத்துடாதீங்க பாஸ்!” என்று பளீர் சிரிப்பை உதிர்க்கிறார் பாவனா.

நம் நெஞ்சுக்குள் உண்டாகிறது பூகம்பம்!

(17.07.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.