நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி  கண்மூடித்தனமாக சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது துப்பாக்கி ஏந்திய நபர்  நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒண்டோ மாநிலத்தின் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஃபன்மிலாயோ இபுகுன் ஒடுன்லமி இது குறித்து கூறுகையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் வெடிபொருட்களை வைத்திருந்தனர் என்றும் இந்த கொடிய தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இச்சம்பவத்தை “பெரும் படுகொலை” என்று வர்ணித்த ஓண்டோ மாநில ஆளுநர் அரகுன்றின் ஒலுவரோதிமி அகெரெடோலு, தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் ரெவரெண்ட் அகஸ்டின் இக்வு இது குறித்து கூறுகையில், “தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் செயின்ட் ஃபிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் வருத்தமளிக்கிறது” என்றார்.

பெந்தெகொஸ்தே பண்டிகையின் கிறிஸ்தவ விடுமுறை நாளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்த போப் பிரான்சிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நைஜீரியாவிற்காகவும் பிரார்த்தனை செய்வேன் என்று கூறினார்.

மேலும் படிக்க | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்

“கொடூரமான படுகொலையை” கண்டித்த அதிபர் முஹம்மது புஹாரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றார். ஹைஜீரியாவில் சில பிராந்தியங்களில் ஜிஹாதிகள் மற்றும் கிரிமினல் கும்பல் செயல்படுகின்றன. நைஜீரியாவில் வடகிழக்கில் 12 ஆண்டுகாலமாக ஜிஹாதி  தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவின் தெற்கு பகுதியில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில், மதத் தளங்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன. அங்கு சில சமயங்களில் இருசமூகங்களுக்கு இடையே பதட்டங்கள் வெடிக்கும்.

ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், கண்டத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடத்தல் தாக்குதல்கள் பொதுவானவை என்றாலும், நாட்டின் ஒப்பீட்டளவில் அமைதியான பகுதியான தென்மேற்கில் ஞாயிற்றுக்கிழமை  நடந்த பொது மக்கள் மீதான துப்பாக்கித் தாக்குதல்கள் அரிதானவை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.