இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவசர வேண்டுகோள் 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (IFRC) 28 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு (கிட்டதட்ட 10.4 பில்லியன் ரூபா ) உடனடி நிவாரணம் வழங்குவதற்காகவும், 500,000 பேரின் நீண்டகால மீட்பு பணிக்காகவும் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், இலங்கையில் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான அவசரநிலையாக மாறியுள்ளதாக IFRC இன்று எச்சரித்துள்ளது.

“COVID-19 தொற்றுநோய்களின் போது ஏற்கனவே உணவை பெறுவதில் இருக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் மக்களின் நிலைமை பேரழிவு தரும் நிலைமைக்கு மாறியுள்ளது எனவும் தனி குடும்பஸ்தர், நிலையான வேலை இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே வருமான இழப்பில் உள்ளவர்களுக்கு இது இன்னும் மோசமான நிலமை ” என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேஷ் குணசேகர சுட்டி காட்டி இருந்தார்.

மேலும் “இலட்ச கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் சரி செ‌ய்ய எங்களுக்கு இப்போது சர்வதேச ஆதரவு தேவை எனவும் மக்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் , அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெறவும் இது ஒரு நீண்ட, கடினமான பாதையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.